புதுச்சேரி மாநிலம் சுல்தான்பேட்டைபழம்பெரும்
மன்பயீ ஆலிம் பெருந்தகை .லால்பேட்டை
ஜாமிஆவில் 1964 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற
மௌலானா மௌலவி ஃபத்ஹுல்லாஹ் மன்பயீ
ஹழ்ரத் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா 06/03/ 2019 (புதன்) லுஹர்
தொழுகைக்குப்பின் சுல்தான் பேட்டை,
முஹம்மதியா பள்ளிவாசலில் நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின்,மார்க்க சேவைகளையும்,நல்லறங்களையும் ஏற்றுக் கொண்டு,
குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னத்துல் பிர்தௌஸ்'
எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ
செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,
உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர் பிரார்த்தனை
செய்கிறார்கள். ஆமீன் ஆமீன். வஸ்ஸலாம்.
ஹழ்ரத் அவர்களைப் பற்றி ;-
ஹஜ்ரத்அவர்களின் சொந்த ஊர் ராமநாதபுரம்
மாவட்டம்,முதுகுளத்தூர் ஆகும்.
புதுச்சேரி,சுல்தான் பேட்டையில் சில ஆண்டுகள்
இமாமத் பணி செய்து ,பிறகு தங்களது கடைசி
காலம் வரை சுல்தான் பேட்டையிலேயே
இருந்தவர்கள்.ஹஜ்ரத் அவர்கள்.
குர்ஆனின் குரல் ஆசிரியர் அஷ்ரப் அலி மன்பயீ ஹஜ்ரத்
அய்யம்பேட்டை ஜியாவுதீன் மன்பயீ ஹஜ்ரத்,
கேரளா,அப்துல் லத்தீப் மன்பயீ ஹஜ்ரத் போன்ற பெரும்
ஆலிம்களோடு ஓதி இருக்கிறார்கள்.
தற்போது லால்பேட்டை, ஜாமிஆவின் பேராசிரியர்
அல்லாமா அமானி ஹஜ்ரத் அவர்களின் அருமை
மகனார் முஹம்மது அஹமது ஹஜ்ரத் அவர்களின்
வகுப்புத் தோழர் ஆவார்.
ஹஜ்ரத் மிகவும் எளிமையானவர்கள்..
அனைவரிடமும் அன்பாக பழகுபவர்கள்.
உலமாக்கள் மீது அளப்பெரும் அன்பு கொண்டவர்கள்* .
யார் சந்திக்க சென்றாலும் அவர்களை அதிகமாக
அவ்ராதுகள் ஓதி வாருங்கள் என்று அறிவுரை
கூறுவார்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் ஹஜ்ரத்
பெருந்தகையின் கப்ரை சுவர்க்க பூங்காவாக ஆக்கி,
அன்னாரின் பிழைகளை பொறுத்து அன்னாருக்கு ஜன்னதுல்
பிர்தௌஸ் என்ற உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக.
ஆமீன்.அன்னாரின் மஃபிரத்திற்கு
கூறுவார்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் ஹஜ்ரத்
பெருந்தகையின் கப்ரை சுவர்க்க பூங்காவாக ஆக்கி,
அன்னாரின் பிழைகளை பொறுத்து அன்னாருக்கு ஜன்னதுல்
பிர்தௌஸ் என்ற உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக.
ஆமீன்.அன்னாரின் மஃபிரத்திற்கு
துஆச் செய்தவனாக...
மௌலவி
D. கமருஜ்ஜமான் ஃபாஜில் மன்பயீ
இமாம், முஹம்மதிய்யா பள்ளிவாசல்,
அரியூர்,புதுச்சேரி.
அரியூர்,புதுச்சேரி.
No comments:
Post a Comment