Tuesday, 12 March 2019

மௌலானா மௌலவி முஹம்மது ஈஸா ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்கள் மறைவு



அல்லாமா அமானி ஹழரத் கிப்லா அவர்களின் மாணவர்,
ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் கேரள 
மாநில தலைவர் தாருல் இஸ்லாஹ் தீர்பாயத்தின் 
தலைவர் மௌலானா மௌலவி முஹம்மது ஈஸா ஃபாஜில் 
மன்பயீ ஹழரத் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


ஹளரத் அவர்களுக்கு வயது 81. நீண்ட நெடுங்காலமாக 
சமுதாயப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் 
கொண்டவர்கள்;வயது வேறுபாடின்றி எல்லோரையும் மதித்து ஒருங்கிணைந்து பணியாற்றக்கூடியவர்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின்,மார்க்க சேவைகளையும்,நல்லறங்களையும் ஏற்றுக் கொண்டு,
குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்'
எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ
செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும்,
உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்
 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்
மன்பயீ ஆலிம் இணைய தளத்தினர் பிரார்த்தனை
செய்கிறார்கள். ஆமீன் ஆமீன். வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment