தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை உயர்மட்ட குழுவின்,
அவசர ஆலோசனைக் கூட்டம் மதுரையில் புதிதாக கட்டப்பட்டு
வரும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகத்தில்
22-10-16 சனிக்கிழமை அன்று மாநில தலைவர் மவ்லானா
மவ்லவி ஷைகுல் ஹதீஸ் A.E.M.அப்துற்றஹ்மான் ஹள்ரத்
தலைமையில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..
இக்கூட்டத்தில் நம்முடைய உயிறினும் மேலான ஷரீயத்
சட்டத்தின் உரிமையாக இருக்ககூடிய, முஸ்லீம் தனியார்
சட்டத்திற்கு எதிராகவும்,பல சமூகத்தினர்கள் ஒற்றுமையாகவும்,
அமைதியாகவும் வாழக்கூடிய நம்முடைய இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும்,அமைதிக்கும் எதிராக உள்ள பொதுசிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த முற்சிக்கும் மத்திய அரசுக்கு நம்முடைய
எதிர்பை தெரிவிக்கும் முகமாகவும், முஸ்லீம் தனியார் சட்டம் ஆண்,
பெண் இருசாராருக்கும் பாதுக்காப்பாகவே உள்ளது. என்ற நம்முடைய நிலைபாட்டைதெரிவிக்கும் முகமாக, ஆல் இந்தியா முஸ்லீம் பர்சல்
லா போர்டின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுதும் கையெழுத்து
இயகத்தை நடத்துவது,மேலும் நீதி மன்றத்தின் உத்தரவின்
படி காவேரி மேலான்மை குழு அமைக்க, மத்திய அரசை
வலியுறுத்துதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment