Sunday, 24 August 2014

லால்பேட்டையில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா !!!



அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிவாகிகளுக்கு, காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக பாராட்டு விழா, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரியின் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் வளாகத்தில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.



IMG-20140823-WA0004



ஜாமிஆவின் மூத்த பேராசியரும், முன்னாள் முதல்வர் ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில், ஜாமிஆ பேராசிரியர் முஹம்மது காசிம் ஹள்ரத் வரவேற்றார். மௌலானா தளபதி ஷபிகுர் ரஹ்மான் ஹள்ரத் வாழ்த்துரை வழங்கினார்கள்.


புதிய நிர்வாகிகள், மாநிலத் தலைவர் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லுரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி,ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான் ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹள்ரத், செயலாளர் ராமநாதபுரம் புது வயல் தலைமை இமாம் மௌலானா மௌலவி முஹம்மது ரிலா பாக்கவி ஹள்ரத், பொருளாலர் மதுரை ஒத்தகடை மௌலானா மௌலவி முஹம்மது காசிம் ஹள்ரத் ஆகியோர் ஏற்புரையாற்றினார்கள். ஜாமிஆவின் பேராசிரியர் மௌலானா ஜாகிர் ஹூசைன் ஹள்ரத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். வட்டார ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா காரி முஹம்மது அஹமது ஹஜ்ரத்  நன்றி கூறினார்கள்.வஸ்ஸலாம்.

நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்.

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

No comments:

Post a Comment