Monday, 14 July 2014

ஜக்காத்தைப்பற்றி! இரண்டாம் பாகம்.





மௌலானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத்
-முதல்வர் ஜாமிஆ பன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி,லால்பேட்டை

ஜகாத் கடமையாகும் பொருட்கள்….

தங்கம், வெள்ளி இவைகளின் விலைக்கு சமமாக உள்ளரூபாய்கள், வியாபாரப் பொருட்கள், கால்நடைகள், தானியங்கள்,காய்கறிகள் ஆகிய பொருட்கள் ஜகாத் கடமையாவதற்குரியபொருட்களாகும்.

பருவ வயதையடைந்த – புத்தி சுவாதீனமுள்ள முஸ்லிம்செல்வந்தர்களின் மீது இது கடமையாகும்.

ஜகாத் கடமையாகும் பொருட்களில் தனக்கும், தன்குடும்பத்திற்கும் தேவையான பொருட்கள் போக கூடுதலாகஎவரிடம் இருக்கின்றதோ அவர்கள்தான் இஸ்லாமியப்பார்வையில் செல்வந்தர்கள். அந்த கூடுதலுக்கும் இஸ்லாம் ஒருவரம்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரம்புக்கு பெயர் `நிஸாப்’என்று கூறுவர்.

ஜகாத் கடமையாகும் அளவான நிஸாபின் அளவுஎன்ன?

தங்கம், பவுன் – எண்பத்தி ஏழரை கிராம்வெள்ளி – அறுநூற்று பனிரெண்டரை கிராம்தேவையை விட கூடுதலாக இருக்கும் பொருட்களுக்கும் இந்த அளவு அடிப்படை நிஸாப் ஆகும்.

எவ்வளவு ரூபாய் இருந்தால் ஜகாத் கடமையாகும்?

அந்த கால கட்டத்தில் அறுநூற்று பனிரெண்டரை கிராம்வெள்ளியின் விலை எவ்வளவு இருக்கின்றதோ அந்த அளவுக்குரூபாய் இருந்தால் ஜகாத் கடமையாகும்.

ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு ரூபாயைவெள்ளியின் அளவுடன் இணைக்கப்படுகிறது. அதுவே,தலைசிறந்த மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்.

இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தை விட வெள்ளியின்விலை குறைவாக இருப்பதால் வெள்ளியில் ஜகாத்தின்அடிப்படை நிஸாப்பாக உள்ள அறுநூற்று பனிரெண்டரை கிராம்வெள்ளியின் விலைக்கு சரிநிகரான ரூபாயின் மீது ஜகாத்கடமையாகும். இதுதான் ரூபாயில் ஜகாத்தின் நிஸாப் ஆகும்.

உதாரணமாக, இன்றைய நிலவரப்படி ஒரு கிராம்வெள்ளியின் விலை ரூபாய் எட்டு என்று இருந்தால் அறுநூற்றுபனிரெண்டரை கிராம் வெள்ளியின் விலை ரூ.4,900 ஆகும்.எனவே, ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8 என விற்கும் காலத்தில்ரூ.4,900க்கு குடும்ப செலவு போக மீதமாக எவரிடம் இருக்கிறதோ அல்லது அதைவிட கூடுதலாக இருக்கிறதோஅவர் 40-ல் ஒரு பாகத்தை ஏழை களுக்கு ஜகாத்தாககொடுக்க வேண்டும்.

ஜகாத்துடைய பொருட்களை நிஸாப் அளவிற்குபெற்றிருப்பவர்கள் மீது உடனடியாக ஜகாத் கடமையாகாது. ஓர்ஆண்டு முழுமையாக கழிந்த பின்னால்தான் ஜகாத்கடமையாகும். அடிப்படை நிஸாப்பிற்கு மட்டுமே ஆண்டுமுழுமை பெற வேண்டும் என்பது நிபந்தனையாகும். அடிப்படை நிஸாப்பிற்கு அப்பால் கூடுதலாக வந்து இணைபவைகளுக்குஓர் ஆண்டு முழுமை பெற வேண்டும் என்பது நிபந்தனை அல்ல.அடிப்படை நிஸாப்பிற்கு ஜகாத் கடமையாகும் போது கூடுதலாக இடைப்பட்ட காலத்தில் இணைந்ததற்கும் ஜகாத் கடமையாகும்.

சான்று

சென்ற ஆண்டு ரமளான் மாதத்தில் 11 பவுன் நகை ஒருவர்வாங்கினார். இந்த ஆண்டு ரமளானில் அந்த நகைக்கு ஜகாத்கடமையாகி விடும். சென்ற ஆண்டு ரமளானுக்கு பின் 6 மாதம்கழிந்து 9 பவுன் நகை வாங்கினார். இப்போது அவரிடம் இருப்பது20 பவுன் நகை. இதில் 11 பவுன் ஓர் ஆண்டு முழுமை பெற்றுவிட்டது. 9 பவுனுக்கு 6 மாதம் மட்டுமே முழுமை பெற்றுள்ளது. இருந்தபோதிலும் இவர் 20 பவுன் நகைக்கும் ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும். காரணம், அடிப்படை நிஸாத்திற்கு மட்டுமேஓர் ஆண்டு முழுமை பெற வேண்டும் என்பது நிபந்தனையாகும். இடையில் வந்து சேர்ந்தவைகளுக்கு அந்த நிபந்தனை இல்லை.

நன்றி மணிச்சுடா் நாளிதழ்.
நன்றி ;-லால்பேட் எக்ஸ்பிரஸ்.……தொடரும்.

No comments:

Post a Comment