Monday, 14 July 2014

ஜக்காத்தைப்பற்றி! முதல் பாகம்.


மௌலானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத்
-முதல்வர் ஜாமிஆ பன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி,லால்பேட்டை

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் கேபிடலிஸம்,கம்யூனிஸம், சோஷலிஸம் போன்ற இஸங்கள் தோன்றியுள்ளன.தோன்றிய இஸங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன என்பதுதெளிவான விஷயம்; மனிதனைப் படைத்த இறைவன், மனிதனுக்காக தீட்டிய திட்டங்கள், இறக்கியருளியச் சட்டங்கள்,அவை கள்தான் முழு வெற்றி பெறமுடியும்.

ஜகாத், மனிதனைப் படைத்த இறைவனால், பொருளாதாரம்சீராக அமைய அது வளமிக்கதாக ஆக, ஓரிடத்தில் குவியாமல் இருக்க, வறுமை நீங்க, கொடுக்கப்பட்ட அற்புதமானதிட்டமாகும். அதுவே சட்டமாகும்.

பொருள் வளத்தில் அனைவரும் சமமாக இருந்தால்வேலைகள் நடைபெறாது-பொருட்கள் உற்பத்தியாகாது. உடல்பலம் ஒருவரிடம், பொருள்பலம் மற்றொருவரிடம், அறிவுத்திறன்வேறொருவரிடம், இப்படியாக படைத்து ஒருவர் மற்றவரைஅணுகி வாழவேண்டு மென்ற நியதியை அல்லாஹ்ஏற்படுத்தியுள்ளான்.

மனிதர்கள் அனைவரையும் பொருள் வளமிக்கவர்களாகஆக்குவது அல்லாஹ்வால் முடியாத செயல் அல்ல. அவனுடையகருவூலம் அள்ளினால் குறைந்துவிடும் தன்மை பெற்றதும் அல்ல.ஆற்றல்கள் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ், ஏற்றத்தாழ்வுகளை இந்த உலக நியதியாக ஆக்கியுள்ளான். ஏற்றத் தாழ்வுகளினால் மனிதன் முடங்கி விடாமல் முன்னேற, சில பலசட்டங்களையும் இறக்கி அருளியுள்ளான். அவைகளில்ஒன்றுதான் ஜகாத் என்னும் அருமையான திட்டம்.

ஜகாத்தைப் பற்றி குர்ஆன்

தொழுகையை நிறைவேற்றியும், ஜகாத்தை கொடுத்தும்வாருங்கள்.(நீங்கள் மரணமடையும் முன்பு) உங்களுக்காக நீங்கள் அனுப்பி வைத்த நன்மைகளை (மறு உலகில்)அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அல்லாஹ் நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 2:110)

தங்கம், வெள்ளியை சேமித்து வைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவர்களுக்கு கடுமையானவேதனையுண்டு என நபியே! நீர் செய்தி கூறுவீராக!

அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவர்களின்நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும்,அவற்றைக் கொண்டே சூடு போடப்படும். இவைதாம் நீங்கள்உங்களுக்காக சேமித்து வைத்தவை. ஆகவே, நீங்கள் சேமித்துவைத்ததை சுவைத்துப் பாருங்கள் என்றுகூறப்படும்.(அல்குர்ஆன் 9:34,35)

அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்கு வழங்கியவற்றில்கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது எனஎண்ணிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்குதான்.அவர்கள் கஞ் சத்தனம் செய்த பொருளை மறுமை நாளில்அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக மாட்டப்படும். (அல்குர்ஆன்3:180

ஜகாத்தைப் பற்றி நபிமொழி

எவருக்கு அல்லாஹ் பொருள் செல்வத்தைக் கொடுத்தானோஅவர் தமக்கு கொடுக்கப்பட்ட செல்வத்திற்குரிய ஜகாத்தை நிறைவேற்றவில்லையெனில் அச்செல்வம் கியாமத் நாளில்விஷம் நிறைந்த பாம்பின் வடிவத்தில் தோற்றமெடுத்து, அவரின்கழுத்தில் அது சுற்றிக் கொள்ளும்.

அதனுடைய கடுமையான விஷத்தின் காரணமாக, தலைமுடிகள் உதிர்ந்து வழுக்கைத் தலையாகிவிடும். அதன் இரு கண்களுக்கு மேலாக வெண்ணிறமான இரு புள்ளிகள் இருக்கும்.(இதுவே விஷம்நிறைந்த பாம்பின் அடையாளமாகும்).

கழுத்தைச் சுற்றிக் கொண்ட அந்த பாம்பு, “நான் தான் நீசேர்த்து வைத்த செல்வம், நீ புதைத்து வைத்த புதையல்” என்றுகூறிக் கொண்டே, அவனை அது தீண்டிக் கொண்டே இருக்கும்என நபி கள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரீ

ஜகாத் நிறைவேற்றப்படாத செல்வம் அழிந்தே தீரும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள்அறிவித்துள்ளார்கள்.
நூல் : முஸ்னத் ஷாபியீ

ஹள்ரத் அஸ்மா பின்த் யஜீத் அறிவித்துள்ளார்கள்: நானும்,என்னுடைய சிறிய தாயாரும் கையில் தங்க வளையல்அணிந்தவர்களாக பெருமானாரிடம் சென்றோம்.

இதனுடைய ஜகாத்தை நிறைவேற்றி விட்டீர்களா? என நபிபெருமானார் எங்களிடம் வினவினார்கள். நிறைவேற்றவில்லைஎன பதிலளித்தோம்.

இதைச் செவியுற்ற பெருமானார், `உங்கள் இருவருக்கும்கியாமத் நாளில், அல்லாஹ் நெருப்புக் காப்புகள் அணிவிப்பதைப்பற்றிய பயம் இல்லையா?’ என எச்சரித்து, அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றி விடுங்கள் என கட்டளையிட்டார்கள்.
நூல்: அஹ்மது

அல்லாஹ்வின் அச்சமுடையோருக்கு ஓரிரு ஆதாரங்களேபோதுமானது. இதை உணர்ந்து செயல்பட அல்லாஹ் தவ்பீக்செய்வானாக.

1. ஜகாத் என்றால் என்ன?

`ஜகாத்’ என்ற சொல்லிற்கு சுத்தமாக்குதல், அதிகமாகுதல்,வளர்தல் என்ற பொருள்கள் அகராதியில் எழுதப்பட்டுள்ளன.ஜகாத்துடைய நிஸாப் பெற்றிருப்பவர், அவரிடம் இருக்கும்பொருட்களில் நாற்பதில் ஒரு பகுதியை தகுதியுடைய ஏழைக்குகொடுத்து உரிமைப் படுத்துவதை `ஜகாத்’ எனக் கூறுகிறது இஸ்லாம்.

அகராதியில் கூறப்பட்டுள்ள பொருளையும், இஸ்லாம் கூறும்பொருளையும் இணைத்து ஆராயும்போது, ஜகாத்தினால்கிடைக்கும் பயன்கள் தெளிவாகத் தெரிகின்றன.செல்வந்தர்கள், தங்கள் மீது கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதால், அவர்கள் பாவங்களிலிருந்து தூய்மைப்பெறுகிறார்கள்; அவர்களின் செல்வங்களும் தூய்மைபெறுகின்றன; அவைகள் பரக்கத் பெற்ற வளர்ச்சி அடைகின்றன.

நன்றி ;- மணிச்சுடா் நாளிதழ்.

நன்றி ;-லால்பேட் எக்ஸ்பிரஸ்.……தொடரும்.

No comments:

Post a Comment