மௌலானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத்
முதல்வர் ஜாமிஆ பன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி,லால்பேட்டை
வணிகப் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதன் மதிப்புஅறுநூற்று பனிரெண்டரை கிராம் வெள்ளி எடையின் விலைக்குசமமாக இருந்தால் அப் பொருட்களின் மீது ஜகாத் கடமையாகும்.எனவே, வணிகர்கள் தங்கள் கடைகளில் விற்பனைக்காக உள்ளபொருட்களை ஆண்டுதோறும் கணக்கிட்டு மொத்த பொருட்களின் மதிப்பீட்டில் 40-ல் ஒரு பாகத்தை ஜகாத்தாக நிறைவேற்றிடவேண்டும்.
கால் நடைகள் பற்றி ஜகாத் கடமைகள்!
5 அல்லது அதைவிட கூடுதலான ஒட்டகங்கள்.30 அல்லது அதைவிட கூடுதலான மாடுகள்40 அல்லது அதைவிட கூடுதலான ஆடுகள் முதலியவைகள்மீதும் ஜகாத் கடமையாகும். இவைகள் கால்நடைகளுக்குரிய நிஸாப் ஆகும்.
ஒருவர் மீது ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள்!
முஸ்லிமாக இருக்க வேண்டும் – பருவ வயதை அடைந்தவராக இருக்க வேண்டும் – சுயஅறிவு பெற்றவராக இருக்கவேண்டும் – சுதந்திரமுள்ள மனிதராக இருக்க வேண்டும் – நிஸாப்அளவிற்கு செல்வம் பெற்றவராக இருக்க வேண்டும் – பொருட்களின் மீது முழு அதிகாரம் பெற்றவராக இருக்க வேண்டும் – அதுஅவரது கைவசத்தில் இருக்க வேண்டும் – முக்கிய தேவைகளுக்குரிய பொருட்கள் போக மீதமுள்ள பொருட்களாக இருக்கவேண்டும் – கடன்கள் நீங்கலாக உள்ள தொகை, ஜகாத்தின் நிஸாபை அடையப் பெற்றிருக்க வேண்டும் – வளரும்பொருளாகவோ, வளரும் பொருள் மாதிரியாகவோ இருக்கவேண்டும் – ஜகாத்துடைய நிஸாப் ஓர் ஆண்டு முழுமை பெற்றிருக்க வேண்டும்.
இத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்ட செல்வம் அல்லதுபொருட்கள் எவரிடம் இருக்கிறதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். மற்றவர் மீது ஜகாத் கடமையாகாது.
நிஸாபுடைய அளவை பெற்றிருந்தும் ஜகாத்கடமையாகாத பொருட்கள்….
குழந்தைகளுக்கு சொந்தமான நகைகள், காசு, பணம், பொருட்கள் மீது ஜகாத் கடமையாகாது. புத்தி சுவாதீனமற்ற செல்வந்தரின்பொருளிலும் ஜகாத் கடமையாகாது.அடமானமாக வைக்கப்பட்ட பொருளின் – நகைகள் மீது ஜகாத்கடமையாகாது.
காணாமல் போன பொருள் திரும்பவும்கிடைத்தால், காணாமல் போன அந்த கால கட்டத்திற்கு ஜகாத்கடமையாகாது.
பிராவிடண்ட் ஃபண்டில் இருக்கும் தொகை மீது ஜகாத்கடமையாகுமா?
பிராவிடண்ட் ஃபண்டில் இருக்கும் தொகை நம்முடையகரத்தில் கிடைத்த நாளிலிருந்துதான் ஜகாத்துக்குரிய பொருளாகும். அது அரசாங்கத்திலோ, வேறு நிறுவனங்களிலோ எத்தனைஆண்டுகள் இருந்ததோ அத்தனை ஆண்டுகளுக்கும் ஜகாத்தைகணக்கிட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்பது கடமையல்ல. இது பலவீனமான கடன் வகையைச் சார்ந்ததாகும்.எனினும், பிராவிடண்ட் ஃபண்டில் சேர்க்கப்பட்ட பணம்ஜகாத்துடைய நிஸாபை அடைந்த நாளிலிருந்து ஆண்டுகளைகணக்கிட்டு அத்தனை ஆண்டுகளுக்கும் உரிய ஜகாத்தை நிறைவேற்றுவது பேணுதலான விஷயமாகும்.
ஜகாத் கடமையாகாத பொருட்களில் சில….
குடியிருக்கும் வீடு – அணிவதற்குரிய ஆடைகள்புழங்குவதற்குரிய பாத்திரங்கள் – தட்டைகள், தட்டுமுட்டுசாமான்கள், ஃபர்னிச்சர்கள், கார்கள், வண்டிகள், சைக்கிள்கள்,கிதாபுகள், புத்தகங்கள், போர் ஆயுதங்கள், தொழிற் கருவிகள்,மனைகள் போன்ற பொருட்கள் மீது ஜகாத் கடமையாகாது. இவைகள் வணிகத்திற்காக வாங்கப்பட்டிருந்தால் ஜகாத்கடமையாகி விடும்.வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடுகள், கார்கள், பாத்திரங்கள்,கடைகள் எத்தனை இருந்தாலும் அவைகள் மீது ஜகாத் கடமையாகாது. வாடகைப் பொருட்களிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் ஜகாத்தின் நிஸாபை அடைந்திருந்தால் அந்த வருமானங்கள்மீது ஜகாத் கடமையாகும்.
அடமானமாக வைக்கப்பட்டுள்ள தங்க நகை மீது ஜகாத்கடமையாகுமா?
பிறர் கடன் கேட்கும் போது, அவரிடம் நகையை கொடுத்துஅடமானமாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறிஅந்த நகை அடமானமாக வைக்கப்பட்டிருந்த காலத்திற்கும் அந்த நகை மீது ஜகாத் கடமையாகும்.மாறாக, நமக்கு பணம் தேவைப்படும் போது நகையைஅடமானம் வைத்து கடன் பெற்றால் அப்போது அந்த நகை மீதுஜகாத் கடமையாகாது.
(குறிப்பு) நகையை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்குவது பெரும் பாவமாகும். அதிலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும். அடமானம் வைத்து வட்டியில்லாத கடன் வாங்கலாம்.
ஜகாத் பெற தகுதியுடையோர்…
ஜகாத் கடமையானவர்கள், தங்கள் விருப்பப்படி அவர்கள்விரும்பும் நபர்களுக்கெல்லாம் கொடுத்து விட முடியாது.அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள 8 பிரிவினருக்கு மட்டுமேகொடுக்க வேண்டும். இதற்கு மாறாக செயல்பட்டால் ஜகாத் என்றகடமையை நிறைவேற்றியவர்களாக ஆக மாட்டார்கள்.ஏழைகள், தரித்திர நிலையில் உள்ள ஏழைகள், ஜகாத்வசூலிப்பவர்கள், புதிதாக இஸ்லாத்தை தழுவியோர்,அடிமைகளை விடுதலை செய்தல், கடனில் மூழ்கி கிடப்பவர்கள்அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்தவர்கள் – வழிப்போக்கர்கள்.
ஜகாத் பணத்தை கொண்டு செய்யக் கூடாதவை
பள்ளிவாசல் கட்டுதல், அதனுடைய மராமத்துப் பணிகள்செய்தல், மதரஸா கட்டுதல், மருத்துவமனை நிறுவுதல், அனாதை இல்லம் அமைத்தல், சாலை வசதி செய்தல், தண்ணீர் குழாய்அமைத்தல், நீர்த் தேக்கங்கள் நிர்மாணித்தல் போன்ற கட்டடப்பணிகளுக்கும், இமாம்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்குசம்பளம் கொடுத்தல் போன்ற வேலைகளுக்கும் ஜகாத் பணத்தைஉபயோகிக்கக் கூடாது. அதை பெற்ற முத்தவல்லிகளும், நிர்வாகிகளும் அவைகளுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. இவைகளில் செலவு செய்யப்படுமேயானால் ஜகாத் என்றகடமை நிறைவேறாது.(குறிப்பு) மதரஸா, பள்ளிவாசல், மருத்துவமனை, சாலை வசதி,தண்ணீர் வசதி போன்ற செயல்கள் மிக முக்கியமான, உன்னதமான நற்செயல்கள் என்பதில் மாறுபட்ட கருத்துகள் கிடையாது. இவைகளை நன்கொடைகள், பொதுவான தர்மங்கள் மூலம்செயல்படுத்த வேண்டும்.
நன்றி மணிச்சுடா் நாளிதழ்.
நன்றி ;-லால்பேட் எக்ஸ்பிரஸ்.……தொடரும்.
No comments:
Post a Comment