Tuesday 24 June 2014

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் மக்தபுகளின் ஆண்டு விழா

லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் மக்தபுகளின் ஆண்டு விழா 22.06.2014 ஞாயிறு மாலை நடைபெற்றது. 
Image 6
லால்கான்  ஜாமிஆ மஸ்ஜித் அருகில் நடைபெற்ற.இவ்விழாவிற்க்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள்  தலைமை தாங்கினார்கள், 

நிகழ்ச்சியில் குடும்ப வாழ்வில் அதிகம் தியாகம்
செய்வது ஆண்களா ? பெண்களா ? எனும் தலைப்பில் மாணவ,மாணவிகளின் பட்டிமன்றம் நடைபெற்றது
Image 4
பட்டிமன்றத்திற்க்கு அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா ஜாக்கீர்உசைன் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்கள்.
முன்னதாக வெற்றியின் இலக்கை அடைய என்ன வழி எனும் தலைப்பில் கருத்தரங்கம் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா அப்துல்சமது ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.
Image 7
பின்னர் பங்கேற்ற அணைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் லால்கான் மஸ்ஜித் முத்தவல்லி ஹிப்பத்துல்லா,அரபுக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா , ஜாமிஆ செயலாளர் முஹம்மது எஹையா பொருளாளர் ஜாபர் அலி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமாணோர் கலந்து கொண்டனர். வஸ்ஸலாம்.

நன்றி ;- lalpet.net.com

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

No comments:

Post a Comment