அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்
26 -2-2019 அன்று செவ்வாய்க்கிழமை காலை
சரியாக 10:30 மணியளவில் ஜாமிஆ மன்பஉல்
அன்வாரில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின்
தலைவர்மவ்லானா மவ்லவி ஹாபிழ்
A. நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள் தலைமையில்,
ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் மூத்த பேராசிரியர்
ஷைகுல் ஹதீஸ் மவ்லானா மவ்லவி
அப்துர்ரஹ்மான் ஹள்ரத் அவர்கள் முன்னிலையில்
நகர ஜமாஅத்துல் உலமா சபையின்
பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இன்ஷா அல்லாஹ் 9-3-2019 அன்று
லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில்
நடைபெற உள்ள மன்பயீகள் சங்கமம் நிகழ்ச்சி
சிறப்பாக நடத்துவது குறித்தும், அந்நிகழ்ச்சியில்
லால்பேட்டை ஜமாஅத்துல் உலமா சபையின்
உலமாக்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும்
ஆலோசிக்கப்பட்டு பல குழுக்கள் நியமனம் செய்யப்பட்டது.
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின்
உலமாக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment