Sunday, 24 April 2016

லால்பேட்டையில் புனித மிகு புஹாரி ஷரீஃப் நிறைவு விழா !!!



லால்பேட்டை நகரில் 40 ஆண்டுகளாக ஓதப்படும்,புனிதமிகு 
ஜாமிவுஸ் ஸஹீஹ் புகாரி ஷரிப் 40 ஆவது நிறைவு விழா, 09.04.2016 
ஞாயிற்றுக்கிழமை அன்று லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 
அரபுக் கல்லூரி தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு ஜெ .எம்.ஏ .அரபிக்கல்லூரி முதல்வர்
மௌலானா ஏ .நூருல் அமீன் ஹழ்ரத் தலைமை வகித்தார்கள். 
நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா
ஜாக்கிர் ஹுசைன் ஹழ்ரத் வரவேற்றார்கள். அவ்வமயம் 
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் 
மௌலான ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்,
கோவை மௌலானா அப்துல் அஜீஸ் பாக்கவி ஹழ்ரத் 
மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் ஹழ்ரத்,
மௌலானா வி.ஆர்.அப்துஸ் ஸமது  ஹழ்ரத் , கடலூர் 
மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா 
ஏ .சபியுல்லா ஹழ்ரத் ஆகியோர் உரையாற்றினார்கள்.
மாவட்ட ஜமாஅத்துல் உலமா பொருளாளர் மௌலானா 
ஏ .ஆர் .சலாஹுத்தீன் ஹழ்ரத் நன்றி கூறினார்கள். .






ஜெ .எம்.ஏ .அரபுக் கல்லூரி நிர்வாகிகள் ,பேராசிரியர்கள் உலமாக்கள் 
ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment