Friday 29 January 2016

லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அவசர கூட்டம் நடைபெற்றது !!!



24- 01- 2016 ஞாயிறு மாலை லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அவசர கூட்டம் JMA அலுவலகத்தில் நடைபெற்றது. தலைவர் அல்ஹாஜ் J.M. அப்துல் ஹமீது தலைமையில் மத்ரஸா நிர்வாகசபை உறுப்பினர்கள், அனைத்து மஹல்லா முதவல்லிகள், சமுதாய இயக்க, கட்சிகள் பிரதிநிதிகள், உலமாக்கள் கலந்து கொண்டனர்.
எதிர வரும் 26 ந்தேதி முஸ்லிம் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்துல்உலமா இணைந்து நடத்தும் ஷிர்க் விளக்க பொதுக்கூட்டத்தை லால்கான் தோப்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் ஊர்மக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
ததஜ இயக்கத்தினர் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிறற்கு அழைக்கிறோம் என்ற பெயரில் ஊரில் பல இடங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். அதில் சகாபாக்கள், வலிமார்கள், உலமாக்கள் அனைவரையும் தரக்குறைவாக பேசுவதாலும், முஸ்லிம்களை முஷ்ரிக் என்றும், நரகத்திற்கு தான் போவீர்கள் என்று கூறுவதாலும், மனதிற்கு தோன்றியதை எல்லாம் ஷிர்க் என்று தவராக பேசுவதாலும் இனி இவர்களின் பிரச்சாரங்களை மஹல்லாக்களின் எல்லைகளில் நடத்த அனுமதிக்க கூடாது என தீர்மானிக்கப்பட்டது.
அவர்கள் நடத்தும் மாநாட்டிற்கு பொதுமக்கள் போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதுடன் மீறி யாரும் சென்றால் அவர்களின் எந்த தேவைக்கும் ஊர் ஒத்துழைக்காது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஜமாஅத்துல் உலமாவின் லட்டர் பேடையும், தலைவரின் கையெழுத்து, ரப்பர் ஸ்டாம்ப் போன்றவற்றை மோசடியாக பயன்படுத்தி தவரான நோக்கம் கற்பித்து சமுதாயத்தை ஏமாற்ற முனைந்துள்ளனர். இதை சைபர் க்ரைம் குற்றமாக புகார் செய்ய நடவடிக்கை எடுப்பதென முடிவு செய்யப்பட்டது.
இன்னும் தேவையான பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.










No comments:

Post a Comment