புனிதமிகு புகாரி ஷரீப் 39-ஆம் ஆண்டு நிறைவு விழா துஆ மஜ்லிஸ், 22.04.2015 திங்கள் மாலை செவ்வாய் இரவு 9 மணியளவில், ஜாமிஆ தாருல் தப்ஸீர் கலைகூடத்தில், ஜாமிஆ முதல்வர் மவ்லவி அல்ஹாஜ் ஏ.நூருல் அமீன் ஹழ்ரத்
தலைமையில் நடைப்பெற்றது.
மவ்லவி அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துர் ரப் ஹழ்ரத் முன்னிலை வகித்தார்கள், மவ்லவி அல்ஹாஜ் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத், பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவி அல்ஹாஜ் அப்துல் ஹமீது ஹழ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியாக ஜாமிஆ முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹழ்ரத் திக்ரு செய்து துஆ செய்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஜாமியாவின் பேராசிரியர்கள், உலமாக்கள் மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment