Wednesday 18 March 2015

காட்டுமண்ணார்குடி வட்டார மற்றும் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது

காட்டுமன்னார்குடி வட்டார மற்றும் லால்பேட்டை நகர 
ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம் 
17-3-2015 அன்று,செவ்வாய் காலை 10:00 மணிக்கு 
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் 
கல்லூரியின்,தாருல் ஹதீஸ் கலைக் கூடத்தில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

20323_3665001

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் 
மௌலானா மௌலவி ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான்,
A.E.M.அப்துர்ரஹ்மான் ஹள்ரத் அவர்கள் 
தலைமை தாங்கினார்கள். 

J.M.A.அரபுக் கல்லூரி முதல்வர் கடலூர் மாவட்ட 
அரசு காஜி  மௌலானா மௌலவி,அல் ஹாபிழ்,
காரி A.நூருல் அமீன் ஹள்ரத் மற்றும் 

காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மௌலவி, காரி R.Z.முஹம்மது 
அஹ்மது ஹள்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைச் 
செயலாளரும், கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமாப் பொருளாளருமான, மௌலானா மௌலவி,
A.R.ஸலாஹூத்தீன் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் 
வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
10603411_3665

லால்பேட்டை நகரச் செயலாளர்,மௌலானா 
மௌலவி,J.ஜாகிர்ஹூசைன் ஹள்ரத் அவர்கள் 
கூட்டத்தின் தீர்மானங்களை முன்மொழிந்தார்கள்.

இக்கூட்டத்தில் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் 
கல்லூரியின் பேராசிரியர்களும், லால்பேட்டை, 
ஆயங்குடி, கொள்ளுமேடு, கந்தகுமாரன், நெடுஞ்சேரி, 
புத்தூர் காட்டுமன்னார்குடி,எள்ளேரி,மானியம் ஆடூர் 
ஆகிய ஊர்களிலிருந்து ஏராளமான,உலமாக்கள் 
திரளாக கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் 
நிறைவேற்றப்பட்டன.
11008792_36650

*ஏப்ரல் 25 ஆம் தேதி,சிதம்பரம் மாநகரத்தில் நடைபெறும் 
மாநில அளவிலான,மீலாது மாநாட்டிற்கு வட்டாரத்தின் 
சார்பாக,மாநாட்டு பணிக்குழு தேர்வு செய்யப்பட்டது.
*லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், 
நடத்தப்படும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸின், 39ஆம் ஆண்டு  மஜ்லிஸ்
இன்ஷா அல்லாஹ் 21:3:2014 அன்று ஆரம்பமாக இருக்கிறது.

வழக்கம்போல் அம்மஜ்லிஸை சிறப்பாக நடத்துவது,
என்றும் நிறைவு விழாவில், மௌலானா மௌலவி,
அப்துல் காலிக் ஹஜ்ரத் அல்லது மௌலானா மௌலவி,
முஹம்மது குட்டி ஹஜ்ரத் ஆகிய இருவரில் 
ஒருவரை அழைப்பது.
*லால்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 
ஆடு,மாடு மற்றும் கோழிகளை அறுக்கும் இறைச்சிக் 
கடைகளில். ஷரீஅத் முறைப்படி அறுக்கப்டுகிறதா? 
என்று கண்கானிப்பதோடு ஷரீஅத் முறைப்படி 
அறுக்க வலியுறித்தி கடிதம் எழுதுவது, உள்ளிட்ட
 பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
*இக்கூட்டத்தில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் 
புதிய பொருளாளராக  மௌலானா மௌலவி,
R.S.P.அபுல்பைசல் மன்பயீ அவர்கள் 
தேர்வு செய்யப்பட்டார்கள்.

நிறைவாக காட்டுமன்னார்குடி வட்டார ஜமாஅத்துல்
 உலமா சபைத் துணைத் தலைவர் ஆயங்குடி,
மௌலானா மௌலவி K.P.முஹம்மது அன்சாரி 
ஹள்ரத் அவர்கள் நன்றி கூறினார்கள்.

தகவல் ;-

மௌலானா A.R.ஸலாஹுத்தீன்மன்பயீ ஹஜ்ரத்

( பொருளாளர்,கடலூர்மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை )

No comments:

Post a Comment