Friday, 8 August 2014

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை ஜும்ஆப் பள்ளியின் இமாம் மௌலானா மௌலவி அப்துர் ரஜ்ஜாக் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் மறைவு !!!


கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையில் நாற்பது வருட காலமாக இமாமாக பணியாற்றிய மௌலானா மௌலவி அப்துர் ரஜ்ஜாக் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் கடந்த 1/08/14 அன்று வஃபாத் ஆனார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.2/08/14 அன்று தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று (8-08-2014) மாவட்டதிலுள்ள எல்லா பள்ளிகளிலும் அன்னாரது மஃபிரத்திற்காக துஆ செய்யப்பட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

No comments:

Post a Comment