Saturday, 3 May 2014

லால்பேட்டையில் புனித மிகு புகாரி ஷரீஃப் 38 ஆம் ஆண்டு நிறைவு விழா உலமாக்கள் பங்கேற்பு !!!


10295780
நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பொன்மொழிப் பேழையான புனிதமிகு ஜாமிவு ஷஹிஹுல் புகாரி ஷரிப் 38 ஆண்டுகளாக வருடம் தோறும், ஒரு மாதம் உலமாக்களால் ஓதப்பட்டு வருகிறது. இதன் 38 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி, 1.05.2014 அன்று லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள்  தலைமை வகித்து துஆ செய்தார்கள். முன்னாள் முதல்வர் ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

10259719
நகர ஜமாஅத்துல் உலமா செயலாளர் மௌலானா ஜாக்கிர் ஹுசைன் மன்பஈ ஹஜ்ரத் வரவேற்றுப் பேசினார்கள் மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ துவக்க உரையாற்றினார் ,மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி அல்லாமா ஷைகுல் ஹதீஸ் அபுல் பயான்,ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத்,வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி பேராசிரியர் மௌலானா அப்துல் ஹமீத் பாகவி ஹஜ்ரத்

10169331
ஆகியோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகிய முன் மாதிரிப் பற்றியும் புகாரி ஷரிபில் பதியப் பட்டிருக்கும் ஹதீஸ் பற்றியும் சிறப்புரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் சமுதாயப் பிரமுகர்கள் உலமாக்கள் ஜமாஅத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர்.வஸ்ஸலாம்.

நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

No comments:

Post a Comment