112014
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
லால்பேட்டை மாநகரில்,ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், குடும்ப உறவுகள் சீர்பெற விழிப்புணர்வு மாநாடு நடைபபெறும்.
காட்டுமன்னார்குடி வட்டார ஜமாத்துல் உலமா பொதுக்கழு கூட்டம் 8-2-2014 சனிக்கிழமை வட்டாரத் தலைவர் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் காரி R.Z. முஹம்மது அஹமது ஹள்ரத் அவர்கள் தலைமையில், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மௌலவி ஷைகுல் ஹதீஸ் ,அபுல் பயான்,A.E.M.அப்துற் றஹ்மான் ஹஜ்ரத், JMA முதல்வர்,கடலூர் மாவட்ட அரசு காஜி மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் காரி A. நூருல் அமீன் ஹஜ்ரத், ஜாமிஆவின் மூத்த பேராசிரியர் ஷைகுல் பிக்ஹ் மௌலானா மௌலவி S.A. அப்துர் ரப் ஹஜ்ரத் கிப்லா ஆகியோர் முன்னிலையில் ஜாமியா மன்பவுல் அன்வார் தாருல் ஹதீஸ் கலைக் கூடத்தில் நடைப்பெற்றது.
வட்டார மாநாடு
இக்கூட்டதில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையுடன் இணைந்து லால்பேட்டையில் இன்ஷா அல்லாஹ் 23-3-2014 அன்று .”குடும்ப உறவுகள் சீர்பெற விழிப்புணர்வு மாநாடு” என்ற தலைப்பில் மிகப்பெரிய வட்டார மாநாடு நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்த பின் மாநாட்டில் யார்? யார்?கலந்துக்கொள்வார்கள் என்ற விபரம் தெரியவரும்.இன்ஷா அல்லாஹ்.
நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.காம்
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
No comments:
Post a Comment