Monday, 9 December 2013

பாக்கியாத்150 வது ஆண்டு விழா லிபாஸ் தீர்மாணம் !!!

அல்லாஹ்வின் கிருபையால் 19.11.2013 அன்று காலை நெல்லை மேலப்பாளையத்தில் லிபாஸின் செயற்குழு கூட்டம் தலைவர் மௌலானா P.A காஜாமுஈனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அதில் பாக்கியாத்தின் நூற்றைம்பதாவது ஆண்டு விழா குறித்து கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

வேலூர் அல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரி தனது 157 வது ஆண்டில் 150 வது ஆண்டு விழாவை நடத்துவதை அறிந்து லிபாஸ் மகிழ்ச்சியடைகிறது.

தென்னிந்தியாவில் மார்க்கத்திற்கு உயிரூட்டிய ஒரு அற்புதமான தீனின் கேந்திரத்தை தூய உள்ளத்தோடும் தியாக உணர்வோடும் உருவாக்கிய அண்ணல் அஃலா ஷம்சுல் உலமா அப்துல் வஹ்ஹாப் ஹஜ்ரத் ரஹ் அவர்களையும், அன்னாரது புதல்வர் ஜியாவுத்தீன் முஹம்மது ஹஜ்ரத் அவர்களையும் – இப்பெருமக்கள் ஏற்றிவைத்த மார்க்க கல்வியின் சுடரை தம் தோளில் சுமந்து – இந்த உலகை திரும்பியும் பார்க்காமல் - இல்மு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பாடுபட்டு உலகின் எட்டுத்திக்கிலும் பாக்கியாத்தின் வெளிச்சம் படரக் காரணமாக அதன் முன்னோடிகள் அல்லாமா குலாம் முஹம்மது ஹழரத், அல்லாமா அப்துல் ஜப்பார் ஹஜ்ரத், அல்லாமா அப்துர் ரஹீம் ஹஜ்ரத், அல்லாமா ஷேக் ஆதம ஹஜ்ரத் , அல்லாமா சேக ஹஸன் ஹஜ்ரத் அல்லாமா அபூபக்கர் ஹஜ்ரத் அல்லாமா அல்லாமா அல்லாமா பழ்பரி ஹஜ்ரத் அல்லாமா ஒகே ஹஜ்ரத் அல்லாமா அப்துல் ஜப்பார் ஹஜ்ரத் அல்லாமா சையத் அப்துல் ஜப்பார் ஹஜ்ரத் பட்டேல் அப்துல் வஹ்ஹாப் ஹஜ்ரத், அல்லாமா சித்தையன் கோடை கமாலுத்தீன் ஹஜ்ரத் உள்ளிட்ட அல்லாஹ்வின் ஆட்களை இந்த இனிய தருணத்தில் ஈர் விழிகளோடு லிபாஸ் நினைவு கூறுகிறது. இப்பெருமக்களின் மாறாப்புகழும் மண்ணறை வாழ்வும் மறுமை பேறும் மேன்மேலும் சிறக்க லிபாஸ் இறைஞ்சுகிறது. இப்பெருமக்கள் கட்டமைத்துக் கொடுத்த தீனின் இராஜபாட்டையில் சேவை நோக்கோடும் தகுதியோடும் தெளிவோடும் நடைபோடுவோம் என லிபாஸ் உறுதியேற்கிறது.

மேலும் நிர்வாகத்தை சிறப்பாக கவனித்துக் கொண்டதோடு தாரளமான உதவிகளை செய்த ஆனைக்கார் அப்துஷ் ஷுக்கூர் சாஹிப், வி,கே அப்துர் ரஹீம் சாஹிப், எம். ஏ. கிழ்ரு ஹுசைன் சாஹிப் , எஸ்,பி , முஹம்மது இஸ்மாயீல் சாஹிப், எஸ். எம், அப்துல் ஜமீல் சாஹிப் உள்ளிட்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் பாக்கியாத்தின் மேன்மைக்காக உழைத்த பணியாளர்கள் அனைவரையும் பெருமிதத்தோடு லிபாஸ் நினைவு கூறுகிறது. இப்பெருமக்களுடையவும் இவர்களுடைய சந்த்திகளுடையவும் இம்மை மறுமை வாழ்வு சிறக்க வல்லோன் அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

சமீப காலமாக ஒரு சிலருக்கு மட்டுமே திறக்கிற மூடப்பட்ட கோட்டையாக இருந்த பாக்கியாத் இப்போது அதன் தவப்புதல்வர்கள் பலரையும் அழைத்து விழா நடத்துவது மகிழ்ச்சியளியை அதிகப்படுத்துகிறது. கடந்த 9 ஆண்டுகளாக லிபாஸ் மேற்கொண்டு வருகிற முயற்சிகள் இதற்கு ஒரு காரணம் என்பதில் லிபாஸ் மன நிறைவு கொள்கிறது.

பாக்கியாத்தின் மணிமகுடத்தில் வைரங்களாக ஜொலித்த பல உஸ்தாதுமார்கள் மிக மோசமான முறையில் வெளியேற்றப்பட்டதிலும், பாக்கியாத்தின் போங்கை மாற்ற நடந்த முயற்சிகளினாளூம் கடும் மன வலிக்கு ஆளாகியிருக்கிற பாக்கவிகள் இவ்விழாவில் கலந்து கொள்ள தயங்குவதை லிபாஸ் உணர்கிறது, ஆயினும் பாக்கியாத் அஃலா ஹஜ்ரத் என்ற இரு சொற்களின் மீதுள்ள அபிமானம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த விழாவில் நம்பிக்கையோடு கலந்து கொள்ளூமாறு லிபாஸ் பாகவிகளை கேட்டுக்கொள்கிறது.

பாக்கியாத்தை தூஷிப்பதையே வாடிக்கையாக் கொண்ட சிலர் - அவர்கள் செய்த சில உதவிகளுக்கு பரிசாக - இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருப்பதை பாக்கியாத்தின் தாயுள்ளத்திற்கு சான்றாக ஏடுத்துக் கொள்ளூமாறு லிபாஸ் பாகவிகளை கேட்டுக் கொள்கிறது.

பெரும் பொருட்செலவில் இவ்விழாவை நடத்துகிற பாக்கியாத்தின் மேன்மை தாங்கிய் ஆட்சிமன்றக்குழு இனி வரும் காலங்களில் பாக்கியாத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த விசாலப் பார்வையோடு செயல்படுமாறும், அதன் முதல் கட்டமாக பாக்கியாத் சென்னை காஷிபுல் ஹுதா மதரசாவின் கட்டுப்பாட்டிலிருப்பது போன்ற நிலையை மற்றுமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது.

இவ்விழா சிறக்கவும் இவ்விழாவிற்கு பிறகு பாக்கியாத்தின் பெருமை கியாம நாள் வரை மேலும் மிளிரவும் அல்லாஹ் கிருபை செய்வானாக1 அதற்காக தூய உள்ளத்தோடு உழைக்கிற பாக்கியாத்தின் ஆட்சி மனறக் குழுவினரையும் பாக்கியாத்தின் முதல்வர் உள்ளிட்ட பேராசியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக! ஆமீன்..


நன்றி ;-கோவை மௌலானா அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத்.

வெளியீடு ; மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

No comments:

Post a Comment