Wednesday, 13 November 2013

ஆஷூராவின் வரலாற்றுக் குறிப்புகள்....

சுன்னத்தான ஆஷுரா நோன்பு ஆதிகால வரலாற்று சிறப்பிற் குறியதும். ரொம்ப மகத்துவமானதும்,பேரருள் நிறைந்ததுமாகும்.

அறியாமைக் காலத்திலேயே குறைஷிகள் ஆஷுரா தினத்தில் நோன்பு பிடித்து வந்தார்கள்.

அண்ணல் நபிகள் நாயகம் {ஸல்} அவர்களும் ஆஷுரா அன்று அறியாமைக் காலத்தில் நோன்பு வைத்துள்ளார்கள்.

மதீனா வந்த பிறகும் மா நபி {ஸல்} அவர்கள் நோன்பை தொடர்ந்தார்கள்.

அந்த நோன்பை நோற்கும்படி உத்தரவிட்டார்கள்.

இது {ஆஷுராதினம்} மகத்தான ஒரு நாள். {முஸ்லிம்}.
இது ஒரு நல்ல நாள்.இஸ்ரவேலர்களை அவர்களுடைய விரோதிகளை விட்டும் அல்லாஹ் காப்பாற்றிய தினம்.ஆகவே அன்று மூஸா நபி அவர்கள் நோன்பு வைத்தார்கள் என்று யூதர்கள் வாயிலாக {வும்} கேள்விப்பட்டு நபி மூஸா {அலை} அவர்களுக்கு{அவரது வெற்றியை கொண்டாடு வதற்கு} உங்களை விட நாங்கள் ரொம்ப அருகதை உள்ளவர்கள் என்று கூறி நபி ஸல் அவர்கள் அன்று நோன்பு பிடிக்க உத்தரவிட்டார்கள்.

இதை ரொம்ப வலியுறுத்தியுள்ளார்கள். "இன்று ஆஷுரா தினம்.இது வரை சாப்பிடாதவர்கள் அப்படியே நோன்பு வைத்துக்கொள்ளுங்கள். சாப்பிட்டவர்கள் {இனிமே சாப்பிடாமல்}நோன்பை தொடர வேண்டும்" என்று பொதுமக்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார்கள்.மேலும் இதை பகிரங்கப்படுத்தும்படி உத்தரவிட்டார்கள்.

தாய்மார்கள் தங்களது பிள்ளைகளுக்கு பால் கொடுக்க வேண்டாம் எனக்கட்டளையிட்டார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பை {கட்டாயப்படுத்துவதை} கைவிட்டார்கள்.

விரும்பினால் பிடிக்கலாம்.நாடினால் விடலாம் என்று அதை தளர்த்தினார்கள். {புகாரி-2000,2007-ஃபத்ஹுல்பாரி}.

ஆயினும் "ஆஷுரா நோன்பு ஒரு வருட பாவத்திற்குப் பரிகாரமாகும்"என எடுத்து இயம்பி அதன் சிறப்பை உணர்த்தினார்கள்.

குறைஷிகள் ஆஷுரா நோன்பு வைத்தது ; அதை அவர்கள்{ஹஜ்ஜைப்போல இப்ராஹீம் நபியின்}முந்திய ஷரீஅத்திலிருந்து எடுத்து நடைமுறைபடுத்தியிருக்கலாம்.இதனால் தான் அன்றைய தினத்தில் கஅபாவிற்கு ஆடை அணிவித்து அதை கண்ணியப்படுத்தி வந்தது உள்ளிட்ட பல காரியங்களை அதில் செய்து வந்தார்தள்.இக்ரிமா ரலி அவர்களிடம் இதைப்பற்றி வினவப்பட்டபோது;குரைஷிகள் அறியாமைக் காலத்தில் ஒரு பெரிய பாவம் செய்து விட்டார்கள்.இது அவரகளுடைய மனதை பெரிதும், காயப்படுத்திக் கொண்டிருந்தது.அப்போது அவர்களுக்கு அதற்கான ஒரு தீர்வாக "ஆஷுரா நோன்பு பிடியுங்கள்.அந்த பாவத்திற்கு அது பரிகாரமாகும்" என்று சொல்லப்பட்டது.அதிலிருந்து அவர்கள் அந்த நோன்பை பிடித்து வருகிறார்கள் என்று இக்ரிமா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

வெள்ளப்பிரலயத்தில் நூஹ் நபியின் கப்பல் இன்று தான் வெள்ளம் வடிந்து  ஜூதி மலையில் தரை தடடியது. எனவே நூஹ் நபியும் இறைவனுக்கு நன்றி செலுத்த அன்று நோன்பு வைத்தார்கள்.1

இன்னும் நூஹ் நபி,மூஸா நபி ஆகிய இருவரின் விரோதிகள்  ஜலத்தில் மூழ்கடிக்கப்பட்டு இந்த இரு நபிமார்களுக்கு வெற்றி கிடைத்த திருநாள் ஆஷுரா தினம்.

கிறிஸ்தவர்களும் ஆஷுரா தினத்தை அனுஷ்டித்தார்கள்.{மன்சூக்} மாற்றப்பட்ட சில சட்டங்களைத்தவிர மற்றவைகளில் ஈசா நபி அவர்கள் மூஸா நபியின் ஷரீஅத்தையே பின்பற்றி வந்தார்கள்.எனவே ஈசா நபியும் இன்று நோன்பு வைத்திருக்கலாம்.{ஃபத்ஹுல் பாரி}

புகாரியின் இன்னொரு விரிவுரையான உம்ததுல் காரியில் ஆஷுரா தினத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தொகுத்து கூறப்பட்டுள்ளது.

பல நபிமார்களுக்கு இன்றைய தினத்தில் சஞ்சலங்கள் நீங்கி சந்தோஷங்கள் சம்பவித்தது.

ஆதிபிதா ஆதம் அலை அவர்களின் தவ்பா இன்று தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது இப்ராஹீம் நபியின் பிறந்த நாள்.ஈசா நபி அவர்கள் பிறந்த நாளும்,வானிற்கு உயர்த்தப்பட்ட நாளுமாகும்.

யூசுப் நபி அலை அவர்கள் கிணற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட தினம்.

யஃகூப் நபி அவர்களுக்கு இன்று தான் மங்கிய அவர்களுடைய கண் பார்வை திரும்ப கிடைக்கப்பெற்றது.

யூனுஸ் நபி அவர்கள் மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட நாளும் இது தான்.

தாவூத் நபிக்கு இன்று தான் தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சுலைமான் நபிக்கு அரசாட்சி கிடைத்தது இன்று தான்.

அய்யூப் நபிக்கு நோய் நிவாரணம் கிடைத்ததும் இன்று தான்.

இத்ரீஸ் நபி அவர்கள் உயர் நிலைக்கு உயர்த்தப்பட்டதும் இன்று தான்.


பெருமான் நபி அவர்களுக்கு முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக சந்தோஷ செய்தி வெளியானதும் இன்று தான்.                                                                 தொடரும்......

No comments:

Post a Comment