Showing posts with label ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்வு. Show all posts
Showing posts with label ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்வு. Show all posts

Friday, 11 August 2017

ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்வு !!!



         
 அல்லாஹ்வின் அருளால் 10.8.2017 வியாழக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர், கடலூர் மாவட்ட அரசு காஜி மவ்லானா மவ்லவி A நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமை வகித்தார்கள் லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஜனாப் A.R. நவ்வர்ஹுசைன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லானா மவ்லவி மதார்ஷா ஹள்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்

மவ்லானா மவ்லவி A நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் ஹஜ்ஜின் அவசியம், அதன் சிறப்புகள் மற்றும் ஹஜ்ஜின் போது செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.


லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, கொள்ளுமேடு மற்றும் நெடுஞ்சேரி ஊர்களில் இருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் கலந்து கொண்டார்கள்,

மதரஸா மாணவர்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.வஸ்ஸலாம்.