Showing posts with label புனித புகாரி ஷரீஃப் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா 2018. Show all posts
Showing posts with label புனித புகாரி ஷரீஃப் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா 2018. Show all posts

Wednesday, 21 March 2018

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் புனித புகாரி ஷரீஃப் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! 
முஸல்லியன் !!!! வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
19/03/2018 திங்கள் கிழமை மாலை லால்பேட்டை 
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி 
தாருத் தப்ஸீர் வளாகத்தில் நடைபெற்றது.
ஜெ.எம்.ஏ அரபுக் கல்லூரி முதல்வர் மெளலானா 
காஜி ஏ. நூருல் அமீன் ஹழ்ரத் தலைமை வகித்தார்கள். 
நகர ஜமாஅத்துல் உலமா துணைச் செயலாளர் 
பேராசிரியர் மெளலானா மதார்ஷா மன்பஈ 
வரவேற்றுப் பேசினார்.
ஷைகுல் ஹதீஸ் மெளலானா ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் 
ஹழ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ 
ஸல்லம் அவர்களின் பொன்மொழிப் பேழையான 
அல் ஜாமிஊ ஷஹிஹூல் புஹாரி நூலில் பதிவுச் 
செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களை பற்றி 
ஆய்வுப் பேருரையாற்றினார்கள் .
ஜாமிஆவின் பேராசிரியர்களான மெளலானா முஹம்மது காஸிம் மன்பஈ ஹழ்ரத் , மெளலானா முஹம்மது அலி மன்பஈ ஹழ்ரத் ஆகியோர் உரையாற்றினர்கள்.
மாவட்ட ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவர் மெளலவி ஏ.ஆர். சலாஹுத்தீன் மன்பஈ நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு உறுப்பினர் மெளலானா தளபதி ஏ. ஷபீக்குர்ரஹ்மான் மன்பஈ , ஜெ. எம்.ஏ அரபிக் கல்லூரி தலைவர் ஜெ. அப்துல் ஹமீது , செயலாளர் கே.ஏ.அமானுல்லா , பொருளாளர் ஏ. ஆர். அப்துர் ரஷீத் , மெளலானா முனவ்வர் ஹஸன் , மெளலானா எம். ஓய் .முஹம்மது அன்ஸாரி , மெளலானா ஜாக்கிர் உசேன் , மெளலானா வி.ஆர். அப்துஸ் ஸமது , மெளலானா எஸ்.ஏ.சைபுல்லா நகர ஜமாஅத்துல் உலமா பொருளாளர் மெளலவி ஏ .கே.லியாகத் அலி வட்டார ஜமாஅத்துல் உலமா பொருளாளர் மெளலவி அபு பைசல் மற்றும் உலமாக்கள், அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் , ஜெ.எம்.ஏ . அரபிக் கல்லூரியின் நிர்வாக குழுவினர் ஜமாஅத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர்.