Wednesday, 11 April 2018

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் !!!


பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்,
28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, 
ஜாமிஆ மன்ப‌உல் அன்வார் அரபுக் கல்லூரி தாருத் 
தஃப்ஸீரில், லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா 
சபையின் பொதுக்குழுக் கூட்டம்,
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், 
ஜாமிஆ மன்ப‌உல் அன்வார் முதல்வர் மவ்லானா 
மவ்லவி ஹாபிழ் A. நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள் 
தலைமையில் நடைபெற்றது.
ஆரம்பமாக‌ மவ்லவி ஹாபிழ் சதகத்துல்லாஹ் 
மன்பஈ கிராஅத் ஓதினார்.

மவ்லவி A.R. ஸலாஹுத்தீன் மன்பஈ 
வரவேற்புரை நிகழ்த்தினார்.

மவ்லவி லியாகத் அலி மன்பஈ சென்ற ஆண்டிற்கான 
வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்,

நகர ஜமாஅத்துல் உலமா சபையின் துணை செயளாலர் 
மவ்லவி மதார்ஷா ஹள்ரத் அவர்கள் இவ்வாண்டின் 
புகாரி ஷரீஃப் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்கள்.

லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய 
பொருளாலராக‌ மவ்லவி S.A. ஜமால் அஹ்மத் மன்பஈ 
அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார்கள்.

ரமளான் மாதத்திற்கு முன்பு ரமளான் சிறப்பு 
விழிப்புணர்வு பயான் நடத்துவது உள்ளிட்ட 
பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜாமிஆ மன்ப‌உல் அன்வார் 
அரபுக் கல்லூரி பேராசிரியர்கள்,
நகர ஜமாஅத்துல் உலமா சபையின் உறுப்பினர் 
பலர் கலந்து கொண்டனர்.
வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment