153 ஆம் ஆண்டு விழா 72 வது பட்டமளிப்பு விழா 12-05-2016 அன்று
காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருத் தப்ஸீர்
கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஜாமிஆவின் தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை
தாங்கினார்கள். ஜாமிஆவின் செயலாளர் அப்துல் சமது
வரவேற்புரையாற்றினார்கள்.
காயல்பட்டணம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
T.M.N.ஹாமிது பக்ரி மன்பயீ ஹள்ரத், சென்னை
அடையார் பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலானா
மௌலவி சதீதுத்தீன் பாகவி ஹள்ரத், ஜாமிஆவின்
பேராசிரியர்கள் மௌலானா அப்துஸ் ஸமது ஹள்ரத்,
மௌலானா காசிம் ஹள்ரத், மதரஸா முன்னால் மாணவர்
மௌலவி அப்துல்ரஹ்மான் , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தவ்ரத்துல் ஹதீஸ் மௌலவி ஃபாஜில், மௌலவி ஆலிம்,
ஆகியோருக்கு ஜாமிஆ முதல்வர் மௌலானா நூருல் அமீன் ஹள்ரத்
”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். கணினி பயிற்ச்சி
சான்றிதழை,ஜாமிஆவின் தலைவர் அப்துல் ஹமீது
வழங்கினார்கள். ஜாமிஆவின் பொருளாலர் சார்பில்
மௌலானா ஜாக்கீர் ஹுஸைன் ஹள்ரத் நன்றி கூரினார்.
சான்றிதழை,ஜாமிஆவின் தலைவர் அப்துல் ஹமீது
வழங்கினார்கள். ஜாமிஆவின் பொருளாலர் சார்பில்
மௌலானா ஜாக்கீர் ஹுஸைன் ஹள்ரத் நன்றி கூரினார்.
இறுதியாக ஜாமிஆ முதல்வர் மௌலானா நூருல் அமீன் ஹள்ரத்
துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.
No comments:
Post a Comment