லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின்,
முன்னால் முதல்வரும் தென்னகத்தின் தலைசிறந்த
மார்க்க அறிஞருமான, அமானி ஹழ்ரத் அவா்களின்
மூத்தமகனாரும், லால்பேட்டை ஜாமியா மன்பவுல்
அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா காரி
முஹம்மது அஹ்மது ஹழ்ரத் அவர்களின் சகோதரர்
மௌலானா மௌலவி மஸ்வுத் அஹமத் அஸ்னவி மன்பயீ
ஹழ்ரத் அவர்கள் 26.02.2016 இன்று காலை தாருல் ஃபனாவை
விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை லுஹர்
தொழுகைக்கு பின் வேலூர் மாவட்டம்
பள்ளிகொண்டா நகரில் நடைபெறும்.
ஹழ்ரத் அவர்கள் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல்
அன்வார் அரபுக் கல்லூரி, மற்றும் ஈரோடு தாருல் உலூம்
தாவூதிய்யா அரபுக் கல்லூரியிலும் முன்னால்
பேராசிரியராக பணிசெய்தவர்கள்.
ஹழ்ரத் அவர்கள் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல்
அன்வார் அரபுக் கல்லூரி, மற்றும் ஈரோடு தாருல் உலூம்
தாவூதிய்யா அரபுக் கல்லூரியிலும் முன்னால்
பேராசிரியராக பணிசெய்தவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை
மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற
சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும், மன்பயீ ஆலிம்.காம்,இணையதளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.
No comments:
Post a Comment