Monday, 22 February 2016

கடலூரில் ஷரீஅத் விளக்க மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

2
1


அன்புடையீர் !!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஷரீஅத் 
விளக்க மாநாடு கடலூர் OTயில் நேற்று 21.02.2016 மாலை 
4.00 மணியளவில்,மாவட்டதலைவர் மௌலான மௌலவி 
அல்ஹாஜ் A சபியுல்லா மன்பஈ ஹழ்ரத் அவா்கள் 
தலைமையில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
மௌலானா மௌலவி காரி முஹம்மது ஹழ்ரத் கிராஅத் 
ஓதினார்கள். மௌலானா மௌலவி அப்துல் ரஜ்ஜாக் 
உலவி ஹழ்ரத் அவா்கள் வரவேற்றார்கள். லால்பேட்டை 
ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வர் 
மௌலானா மௌலவி A,நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள் 
துவக்க உரையாற்றினார்கள்.
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத்  தலைவர் 
ஷைகுல் ஹதீஸ் அபுல் பயான் மௌலானா மௌலவி 
அல்லாமா  அல்ஹாஜ் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத் கிப்லா 
அவர்களும், மௌலானா மௌலவி கோவை அஜீஸ் பாக்கவி 
ஹழ்ரத் அவர்களும் இஸ்லாமிய பாரம்பரியம் என்ற 
தலைப்பில் உரையாற்றினார்கள். மௌலானா மௌலவி 
ஜாக்கிர்ஹுசைன் ஹழ்ரத் அவர்கள் மாநாட்டு 
தீர்மானத்தை விளக்கி உரையாற்றினார்கள்.
இறுதியாக சென்னை அடையாறு பள்ளிவாசலின் தலைமை 
இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சதீதுத்தீன் 
பாக்கவி ஹழ்ரத் அவர்கள் உரையாற்றினார்கள். கடலூர் 
மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர்,மௌலானா 
மௌலவி சலாஹுத்தீன் மன்பயீ ஹழ்ரத்  நன்றி கூறினார்கள்.







இச்சிறப்பு வாய்ந்த மாநாட்டில் பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் 
கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

No comments:

Post a Comment