Thursday 17 July 2014

ஜகாத்தைப்பற்றி ! ஐந்தாம் பாகம்



மௌலானா ஏ.நூருல் அமீன் ஹள்ரத்
முதல்வர் ஜாமிஆ பன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி,லால்பேட்டை

சிலர் ஆயுளில் ஒரு தடவை ஜகாத்தை நிறைவேற்றினால்போதும் எனக்கூறி மக்களை குழப்பி வழி கெடுத்து வருகின்றனர். இது குர்ஆன், ஹதீஸுக்கும், ஸஹாபாக்கள், இமாம்களின்வழிகாட்டுதலுக்கும் மாற்றமானதாகும்.

இதுகுறித்து சென்னை புரசை ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம்-தமிழக ஜமாஅத் உலமா பேரவை செயலாளர் கே.ஏ. நிஜாமுதீன் மன்பஈ அவர்களின் விளக்கம்…..

ஒவ்வொரு ஆண்டும் தன்வசம் இருக்கும் பொருட்களைகணக்கிட்டு அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றிட வேண்டும்.முதலாண்டு ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறு ஆண்டுஜகாத் கொடுத்திட வேண்டும்.குழப்பவாதிகள் சிலர் ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்கவேண்டியதில்லை. ஒரு பொருளுக்கு ஆயுளில் ஒரு தடவை ஜகாத்கொடுத்தால் போதுமானது என்பதாகவும், ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுபடியும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லைஎன்பதாகவும் கூறி மக்களை குழப்பி ஜகாத் கொடுப்பவர்களைதடை செய்தும், ஜகாத்துடைய நோக்கத்தையே தகர்த்தெறிந்தும்வருகின்றனர்.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுத்திட வேண்டும்என்பதற்கும், ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுஆண்டிலும் (நிஸாபுடைய அளவு இருந்தால்) ஜகாத் கொடுத்திடவேண்டும் என்பதற்கும், ஹதீஸ்களிலிருந்தும், ஸஹாபாக்களின் நடைமுறைகளிலிருந்தும், சட்ட மேதைகளின் தீர்ப்புகளிலிருந்தும் இங்கு சில விளக்கங்களை தெரிந்து கொள்வோம்.“ஜகாத் கொடுங்கள்’’ என்று அல்லாஹ்வின் திருவசனமும்,ஜகாத் கொடுத்தல் இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸும், புனிதமிகு ஸஹாபாகளின் சொற்களும், செயல்களும், இமாம்களின் தீர்ப்புகளும்1400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் ஜகாத்கொடுக் கப்பட்டு- நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்முஸ்லிம்களின் வழக்கமும், ஒவ்வோர் ஆண்டும் ஜகாத்கொடுத்திட வேண்டும் என்பதையும், ஜகாத் கொடுக்கப்பட்டபொருளுக்கு (நிஸாப் அளவு இருந்தால்) மீண்டும் ஜகாத்கொடுத்திட வேண்டும் என்பதையும் உறுதியுடன்தெரிவிக்கின்றன. இதற்கு வேறு ஆதாரங்களை நாம் காட்டவேண்டிய அவசியமில்லை.எனினும், பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்என்பதற்காக சில விவரங்களை தருகிறோம்.“ஒரு பொருளின் மீது ஓர் ஆண்டு கழன்று வரும் வரை அப்பொருளில் ஜகாத் கடமையாகாது’’ -
முஅத்தா மாலிக் (ரஹ்)
“ஒரு பொருளில் ஓர் ஆண்டு கழன்று வரும் வரை ஜகாத்கிடையாது’’ -
அப்ஜாஸுல் மஸாலிக்
“ ஓராண்டு கழன்று வருவதற்கு முன் ஜகாத் நிறைவேற்றப்படமாட்டாது’’ -

என ரசூல் (ஸல்) அவர்கள் அருளினார்கள். -
அப்ஜஸுல் மஸாலிக்
- மேற்கூறப்பட்ட ஹதீஸ்களுக்கு இமாம் மாலிக் (ரஹ்)அவர்கள் கூறியுள்ள விளக்கத்தில் ஜகாத் கொடுக்கப்பட்ட நாளிலி ருந்து அதன் மீது (ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளின்மீது) ஒராண்டு கழன்று வரும் வரை அதற்கு ஜகாத் இல்லை.
- நூல் முஅத்தாமாலிக்
ஒவ்வோர் ஆண்டும் ஜகாத்தை வசூலிப்பது ரசூல் (ஸல்)அவர் களின் சுன்னத்தான நடைமுறையில் உள்ளது’’ என இப்னுஷிஹாப் அவர்கள் வாயிலாக இப்னு ஸஃது அவர்கள்கூறியுள்ளதை இமாம் ஷாஃபி அவர்கள் அறிவித்துள்ளார்கள் - நூல் - அல்உம்மு.அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) அவர்கள்அறிவிப்பதாவது-மூன்று காரியங்களை செய்தவர் ஈமானின் சுவையைசுவைத்த வராவார்.
<p style="text-align: justify;">1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டுமே வணங்கியவர்.2) தன் பொருளுக்குரிய ஜகாத்தை தன் மகிழ்வுடனும்(பிறருக்கு) உதவி செய்கின்ற முறையிலும் ஒவ்வொரு ஆண்டும்கொடுத்தவர்.3) (கால்நடைகளுக்குரிய ஜகாத்தில்) வயது முதிர்ந்ததையோகுறைவு உள்ளதையோ, நோய்வாய் பட்டதையோ கொடுக்காமல் இருப்பவர். எனினும் உங்களுடைய பொருட்களில் நடுத்தரமானதிலிருந்து கொடுங்கள்.அல்லாஹுத்த ஆலா உங்களிடம்உயர்ந்ததை கேட்கவில்லை. – கெட்டதை கொடுக்கும் படியாகவும்உங்களுக்கு கட்டளையிடவில்லை.’’ என நாயகம் (ஸல்) அவர்கள்அருளினார்கள். நூல் – அபூதாவூத் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை மக்களுக்குஉரையாற்றும் போது, “அநாதைகளுக்கு பொறுப்பேற்றிருப்பவர்அந்த அநாதைகளுக்கு பொருள் இருந்தால் அதில் அவர்வியாபாரம் செய்யவும் (அவ்வாறின்றி, ஒவ்வோர் ஆண்டும்அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றுவதின் மூலம்) ஜகாத்அப்பொருளை சாப்பிட்டு (அழித்து) விடுகின்ற அளவுக்கு அதனை(வியாபாரத்தில் ஈடு படுத்தாமல்) விட்டுவிட வேண்டாம்’’ என்றுகூறினார்கள்.நூல் – திர்மிதீ

மேற்கூறப்பட்ட ஹதீஸ்களெல்லாம் நிஸாப் உள்ளவர் ஒவ்வோர்ஆண்டும் ஜகாத் கொடுத்திட வேண்டும் என்பதையும், ஜகாத்கொடுக்கப்பட்ட பொருளுக்கு அடுத்த ஆண்டு (நிஸாபுடையஅளவு இருந்தால்) ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதையும்தெளிவாக தெரிவிக்கின்றன.

நன்றி மணிச்சுடா் நாளிதழ்.

நன்றி ;-லால்பேட் எக்ஸ்பிரஸ்.காம்.


No comments:

Post a Comment