லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின்
151 ஆம் ஆண்டு விழா 70 வது பட்டமளிப்பு விழா ஜாமிஆவின்
தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
கர்நாடகா அமீரே ஷரீஅத் மௌலானா அல்லாமா முஹம்மது அஸ்ரப் அலி ஹள்ரத், சென்னை அடையார் மௌலானா சதீதுத்தீன் ஹள்ரத், ஆயங்குடி மௌலானா ஜாபர் அலி ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியரும்,மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி அல்லாமா ஷைகுல் ஹதீஸ் அபுல் பயான்,ஏ .இ .எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத்,நீடூர் மிஸ்பாஹூல் ஹுதா பேரசிரியர் மௌலானா முஹையத்தீன் அப்துல் காதிர் ஹள்ரத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தவ்ரத்துல் ஹதீஸ் மௌலவி ஃபாஜில், மௌலவி ஆலிம் ஆகியோருக்கு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு தலைமை காஜியுமான, மௌலானா மௌலவி அல்லாமா.அல்ஹாஃபிழ்,காரி ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் ஜாபர் அலி நன்றி கூறினார்.
இறுதியாக முன்னாள் முதல்வர், ஷைகுல் ஃபிக்ஹ் மௌலானா மௌலவி அல்லாமா முஃப்தி எஸ்.ஏ .அப்துர் ரப் மன்பஈ ஹஜ்ரத் கிப்லா அவர்களின் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
பட்டமளிப்பு விழா காட்சிகள்.
நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.காம்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
No comments:
Post a Comment