Wednesday, 26 March 2014

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் லால்பேட்டையில் மாநாடு நடைப்பெற்றது

காட்டுமன்னார்குடி வட்டார மற்றும் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் குடும்ப உறவுகள் சீர்பெற விழிப்புணர்வு மாநாடு, லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் தாருத் தஃப்ஸீர் கலைக்கூடத்தில், 23.03.2014 மாலை 5 மணியளவில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபைத்  தலைவர், மௌலானா R.Z.முஹம்மது அஹ்மது ஹள்ரத் தலைமையில் நடைபெற்றது.

1000663

ஜாமிஆவின் பேராசிரியர், முஃப்தி மௌலானா அல்லாமா S.A  அப்துர் ரப் ஹள்ரத்,மௌலானா P.S. அப்துல் அலி ஹஜ்ரத்,மௌலானா A.சஃபியுல்லாஹ் ஹள்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மௌலவி மதார்ஷா கிராஅத் ஓதினார். மௌலானா A.R.ஸலாஹூதீன் வரவேற்றார். ஜாமிஆ முதல்வர் மௌலானா முஃப்தி A.நூருல் அமீன் ஹள்ரத் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா அல்லாமா A.E.M.அப்துர் ரஹ்மான் ஹள்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

1505331


சஹாபாக்களின் குடும்ப வாழ்க்கை 

சஹாபாக்களின் குடும்ப வாழ்க்கை எனும் தலைப்பில் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை மேலாய்வாளர் மௌலானா A.முஹம்மது கான் பாகவி ஹள்ரத்

10014537


குடும்ப பிரச்சினைகளும் ஷரீஅத்தின் தீர்வுகளும்

குடும்ப பிரச்சினைகளும் ஷரீஅத்தின் தீர்வுகளும் எனும் தலைப்பில் புதுப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா S.முஹம்மது அலி ஃபாஜில் மன்பஈ ஹள்ரத்

உறவுகள் மேம்பட
உறவுகள் மேம்பட எனும் தலைப்பில், வடபழனி மஸ்ஜித் ஹக்கானி தலைமை இமாம், மௌலானா G.M.தர்வேஷ் ரஷாதி ஹள்ரத் ஆகியோர் பேருரை நிகழ்த்தினார்கள்.


1544579


10152463
மௌலவி முஹம்மது அன்சாரி மன்பஈ ஹள்ரத் தீர்மானங்களை வாசித்தார். வட்டார ஜமாஅத்துல் உலமா பொருளாளர், மௌலவி A.முஹம்மது காசீம் ஹள்ரத் நன்றியுரை ஆற்றினார்.

நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

No comments:

Post a Comment