லால்பேட்டை நூருல் முபாரக் மஸ்ஜித் வளாகத்தில் 12.01.2014 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஸதக் ஜலால்-நாளிரா பெண்கள் அரபு மதரசா திறப்பு விழா ஜாமிஆ முதல்வர் மௌலானா மௌலவி ஏ. நூருல் அமீன் ஹள்ரத் தலைமையில் நடைப்பெற்றது.
ஜாமிஆவின் மூத்த பேராசிரியர் மௌலானா மௌலவி எஸ்.ஏ. அப்துர் ரப் ஹள்ரத் கிப்லா, லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ், நூருல் முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது ஜெகரிய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாமிஆ முதல்வர் நூருல் அமீன் ஹள்ரத் அரபு மதரசாவை திறந்து வைத்து துஆ செய்தார்கள்.
தளபதி மௌலானா ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, ஜாமிஆ பேராசிரியர் வி.ஆர். அப்துஸ் சமது ஹள்ரத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ் விழாவில் முத்தவல்லிகள், ஜமாஅத்தார்கள் ஜாமிஆ நிர்வாகசபை உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
நன்றி ;- லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
No comments:
Post a Comment