Monday, 23 December 2013

அகவை 150 ல் ஜாமிஆ அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் !!!



الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا46)

இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமையும் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா வேலூர் கொண்வட்டம் கூனா பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் மக்கமா நகரத்திலிருந்தும் அறிஞர் பெருமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  தமிழ் உருது மளையாளம் அரபு என நான்கு மொழிகளில் நடக்கிற மாநாடாக இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறனறன.

இன்றைய இந்த ஜும் ஆவில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கேரளாவிலும் இஸ்லாமிய மார்கக் கல்வி வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்த  அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியை பற்றிய செய்திகளை பார்க்க இருக்கிறோம்.

இன்றைய தமிழ் கூறும் நல்லுல்லங்களுக்கு அந்த வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஏனெனில் பாக்கியாத் வருவதற்கு முன் தென்னிந்தியாவின் பல ஊர்களிலும் குறிப்பாக தமிழகத்தில் சில ஊர்களில் பள்ளிவாசல்கள் வருடத்தில் முஹர்ரம் மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கிற நிலை இருந்தது. பாக்கியாத்     அரபுக் கல்லூரி உருவான பிறகு தான் முறையாக மார்க்கம் படித்த பட்டம் பெற்ற ஆலிம்கள் உருவானார்கள். தென்னிந்தியாவெங்கும் ஆலிம்கள் பெருகினார்கள். ஆலிம்களை உருவாக்கும் மதரஸாக்கள் பெருகின. அதனால் பாக்கியாத் உம்முல் மதாரிஸ் தாய்க்கல்லூரி என்ற பெறுமைக்குரியதாக திகழ்கிறது,

தமிழகத்தின் நிர்வாகத் தலைநகராக சென்னை இருந்தாலும் தமிழக முஸ்லிம்களை பொறுத்த வரை வேலூர் அவர்களது சமயத் தலைநகராக  இருக்கிறது. காரணம்.

பாக்கியாத் என்ன கருதுகிறதோ அது தான் தென்னிந்திய மக்களின் அங்கீகரிக்கப் பட்ட பழக்கமாக இருந்தது.

ஜும்ஆ  அன்று பள்ளி வாசலின் மிம்பரில் நின்று தமிழில் பயான் செய்யலாமா என்பது ஒரு பெரும் சர்ச்சையாக உருவான சமயத்தில் புதிதாக அந்தப் பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டாம். அதே நேரத்தில் அப்படி நடக்கிற இடங்களில் அதை மாற்றவும் வேண்டாம் என்று  பாக்கியாத் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பே இதுவிசயத்தில் இன்றுவரை பிரச்சினைகள் இல்லாமல் தமிழகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.


ஆல் போல் தழைத்துச் செழித்து உலகின் அத்தனை பகுதிக்கும் தனது விழுதகளை பாக்கியாத படரச் செய்திருக்கிறது.

இந்தியாவின் தென் மாநிலங்களில் தமிழகத்திலும் கேரளாவிலும் தனிப்பெரும் மரியாதையை பெற்ற நிறுவனமாக பாகியாத் உள்ளது. இந்தப்பகுதியில் மார்க்கக் கல்விப் பணி வாழவும் வளரவும் பாகியாத்தே வழிவகுத்தது. இப்பகுதியல் உள்ள அனைத்து அரபு மதரஸாக்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாகியத்தை தழுவியவையே.

கல்வித் துறையில் பிரமாண்டமாகவும் நவீனமாகவும் வளர்ந்து விட்ட பல நிறுவனங்கள் கேரளாவில் உருவாகிவிட்ட போதும் அங்கு பாகியத்திற்கான தனி மதிப்பு இன்னும் இருக்கிறது என்பது எதார்த்தம். தென்கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் பாகவிகள் சிறப்பான பணிகளால் தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே இஸ்லாம் தழைத்தக் கொண்டிருக்கிறது என்ற சொன்னால் அது தவறாகாது.

சில பெயர்ப் பொருத்தங்கள் கணகச்சிதமாக அமைந்து விடுவதண்டு.
அதற்கு மிகச்சரியான உதாரணம் மஹம்மது (ஸல்) என்ற பெயர்  என்றால் அந்த வரிசையில் இடம் பெற்ற மற்றொரு உதாரணம் பாகியத். உலகின் மூளை முடுக்கஙெ;கும் பல்லாஙிரக்கணக்கான நற்;செயல்களுக்கு பாகியாத் காரணமாக அமைந்தது.

1857 ல் கருவான இந்நிறுவனம் இந்தியாவில் பெதுவாகவும் தென்னிந்தியாவில் குறிப்பாகவும் இந்தப்பாணியில் அமைந்த மூத்த முதன்மையான நிறுவனமாக இருக்கிறது.

இந்த பிரமாண்டமான நிறவனத்தை நிறுவி தென்னிந்தியாவில் ஒரு அமைதியான மார்க்கப் புரட்சிக்கு வித்திட்ட மதிப்பும் மேன்மையும் பெருந்தகைதான் ஷம்சுல் உலமா அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்கள். அவரது ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் காதிரி என்பதாகும் அன்னார் ஹிஜிரி 1248ல் பிறந்து 1337 ல் மறைந்தார். அண்ணாரின் மன்னறை பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரிக்கு முன்புறமுள்ள முற்றத்தில் இருக்கிறது, அன்னார் தமது கல்வித் தரத்தாலும் தூர நோக்குச் சிந்தனையாலும் வணக்க வழிபாட்டுச் செழுமையினாலும் இறை பக்தியினாலும்  தூய தொண்டின் பயணாகவும் தென்னிந்திய மக்களிடையே மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றிருந்தார்கள்.

அஃலா ஹஜ்ரத் சொன்னால் அது ஏற்புக்குரியது என்ற எண்ணம் மக்களிடம் பரவி இருந்தது.

ஹஜ்ரத் அவர்களுக்கு ஹைதராபாத் அரசிடமிருந்து டெபுடி கலக்டர் பதவி வந்தது. அதை ஒதுக்கி விட்டு அவர்கள் கல்விப் பணியில் ஈடுபட்டார்கள்.

ஒரு தோட்டத்திலிருந்து கனிகளைப் பறித்துக் கொடுத்துக் கொண்டிருப்பது  போல அவர்கள் கனவு கண்டார்கள். இதற்கான விளக்கத்தை மக்கா சவ்லத்திய்யா மதரஸாவின் நிறுவனர் ரஹ்மதுல்லா கிரானவி (ரஹ்) அவர்களிடம் கேட்டப்போது மார்க்க கல்விப் பணியில் கவனம் செலுத்துமாறு அன்னார் கூறினார்கள்.
அதற்குப்பின் அஃலா ஹஜ்ரத்  அவர்களின் முழுக் கவனமும் மார்க்க கல்வியின் பால் திரும்பியது,
வேலூர் பெரிய பள்ளிவாசலின் முற்றத்தில் மதரஸாவை தொடங்கினார்கள் ஹிஜிரி 1279 ல் தொடங்கப்பட்ட அந்த மதரஸாவிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அவர்கள் யோசித்துக் கொண்டு குர்ஆனை திறந்த போது அவர்களது கண்ணில் கஹ்பு அத்தியாயத்தின் வல்பாக்கியாதுஸ்ஸாலிஹாத்து கைருன் என்ற வசனம் கண்ணில் பட்டது அதையே பெயராக வைத்தார்கள்.

தீன் கல்வியைப் பற்றிய மகத்தான திட்டங்களும் அதை நிறைவேற்றும் தவக்குலும் ஹஜ்ரத் அவர்களிடம் நிறைய இருந்தது.
திட்டமிட்ட ஒரு பாட முறைய உருவாக்கினார்கள். 7 ஆண்டுகள் மௌலவி படிப்பு 2 ஆண்டு பாஜில் படிப்பு என்ற முறையும் இப்போதிருக்கிற பரீட்சை முறையும் பட்டம்  வழங்கும் முறையும் ஹஜ்ரத் அவர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவையாகும்.அதைப் பின்பற்றித்தான் மற்ற மதரஸாக்கள் செயல் பட்டன,


பாக்கியாத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட தில்லி தேவ்பந்த மதரஸாவின் முதல்வர் காரி தையிப்ப் சாஹிப் இதைக் குறிப்பிட்டுத்தான் தான் பாக்கியாத்தை நாட்டிலுள்ள மதரஸாக்களின் தாய் என்று குறிப்பிட்டார்கள்.

மதரஸாக்களில் மாணவர்களுக்கான சொற்பயிற்சி மன்றங்களும் எழுத்துப் பயிற்சிக்கான கையெழுத்துப் பிரதிகளும் பாக்கியாத்திலிருந்து இந்திய மதரஸாக்களுக்கு கிடைத்த கொடைகளாகும்.

பாக்கியாத்திலிருக்கிற தமிழ் மாணவர் மன்றம் இந்தியச் சுதந்திரத்திற்கு முன் உருவான பழமையான ஒரு மன்றமாகும். 1921 அம்மன்றத்தை துவக்கி இதற்கு லஜ்னத்துல் இர்ஷாத என்று அப்துல் ஜப்பார் மஃகூலி ஹஜ்ரத் அவர்கள் பெயர் சூட்டினார்கள். இன்றளவும் தமிழ் நாட்டில் பல மாணவ மன்றங்களுக்கும் லஜ்னத்துல் இர்ஷாத் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

இம்மன்றங்கள் வழியாக மாணவர்கள் எழுத்திலும் பேச்சிலும் நல்ல பயிற்சி பெற்றுக் கொள்ள வழி ஏற்பட்ட்து, இப்பயிற்சி மன்றத்தில் பட்டை தீட்டப்பட்ட மாணவர்கள் வெளியுலகில் வைரமென ஜொலித்தார்கள்.

பாக்கியாத் தென்னிந்திய முஸ்லிம்களுக்கு நான்கு வழிகளில் மகத்தான பயன்கள் கிடைத்தன,

மார்க்கத்தின் உயர் கல்வியை  போதிக்கும் சிறந்த கல்வியாளர்கள் – ஆசிரியர்கள் –கிடைத்தார்கள். தமிழகத்தில் பல அரபு மதரஸாக்கள் தோன்றவும் ஏற்கெனவே இருந்த அரபு மதரஸாக்கள் மேலும் மலர்ச்சி காணவும் பாகவிகள் காரணமானார்கள்.

பாக்கியாத்தின் விழுதுகளால் உருவான மதரஸாக்கள் !!!

பொதக்குடி அந்நூருல் முஹம்மதிய்யு அரபுக்கல்லூரி அஃலா ஹஜ்ரத்தின் மாணவர் – அப்துல் கரீம் பாகவி அவர்களால் தோற்று விக்கப்பட்ட மதரஸாவாகும் அங்கிருந்து வெளியேறிய நூரிகள் நாடு முழுவதும் தீன் சேவை புரிந்தனர்,  

கூத்தா நல்லூர் - மன்பவுல் உலா அரபுக்கல்லூரி புகழ் பெறக் காரணமாக இருந்த முஹம்மது அலி பாகவி  ஆவார். கூத்தா நல்லூரில் பைஜுல் பாக்கியாத் என்றொரு மதரஸாவும் உருவானது.

லால்பேட்டை -  மன்பவுல் அன்வார் மதரஸா அப்துர்ரஹ்மான் பாகவி ஹழரத் அவர்களாலும் ஜியாவுத்தீன் அஹ்மது அமானி பாகவி ஹழரத் அவர்களாலும் உயர்வு கணட மதரஸாவாகும்.

திருச்சி அன்வாருல் உலூம் அப்துஸ் ஸலாம் ஹழரத் பாகவி அவர்களால் உருவாக்கப் பட்டது,

நீடூர் நெய்வாசல் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியை உருவாக்கிய  அப்துல் கரீம் ஹழரத் பாக்கியாத்தில் படித்தவரே

தமிழகத்தில் மட்டுமல்லாமல்!!

பெங்களூரில்  ஷபீலுர் ரஷாத் மதரஸாவை– அபுஸ்ஸுவூத பாகவி ஹழரத் உருவாக்கினார்,
கேரளா பட்டிக்காட்டில்  – ஜாமியா நூரிய்யா மதரஸாவை ஈ.கே முஹம்மது அபூபக்கர் பாகவி உருவாக்கினார்.
கோழிக்கோடு காந்தபுரத்தில் ஏ.பி அபூபக்கர் அஹ்மது பாகவி மர்கஸ் ஸகாபத்துஸ் ஸுன்னிய்யா என்ற பிரமாணமான நிறுவனத்தை உருவாக்கினார். மர்கஸின் முதல் கட்டிடத்தை பாக்கியாத்தின் பழைய செவ்வக கட்டிட வடிவத்திலேயே கட்டினார் 



இந்தப் பாதையில் பீடுநடை போட்ட பாக்கியாத்தின் முன்னாள் பேராசிரியர்கள் குலாம் முஹம்மத் ஹழரத் அப்துர் ரஹீம் ஹழரத் மஃகூலி அப்துல் ஜப்பார் ஹழரத் அபூபக்கர் ஹழரத் சேக்ஹஸன் ஹழரத் கடப்பா அப்துல் ஜப்பார் ஹழரத சித்தையன் கோட்டை கமாலுத்தீன் ஹழரத் ரயீசுல் இஸ்லாம் ஹழரத் உள்ளீட்ட பலரும்,   திருப்பூர் முஹம்மது ஹழரத் ஈரோடு சித்தீக் அலி ஹழரத நைனார் ஹழரத் வடகரை ஷரபுத்தீன் ஹழரத் பாண்டிச்சேரி பாருக் ஹழரத் செனை அப்துல் மஜீத் ஹழரத் நீடூர் இஸ்மாயில் ஹழரத் செய்துஙக நல்லூர் ஆதம் ஹழரத் பெரம்பலூர் இஹ்ஸானுல்லாஹ் பாகவி  அய்யம் பேட்டை ஜியாவுதீன் ஹழரத் புதுக்கோட்டை அப்துல் ஜப்பார் ஹழ்ரத் ஈரோடு ஜியாவுத்தீன் ஹழரத் எஸ் எஸ் அஹ்மது ஹழரத் எனத்தொடங்கி ஜி எச் டி ஹபீப் முஸ்தபா பாகவி எஸ் பி பட்டினம் மௌலானா பாகவி  பரங்கிப்பேட்டை கலீல் பாகவி திருச்சி பிலால் பாகவி வேலூர் யூசுப் பாகவி வரை  அன்றிலிருந்து இன்று வரை அரபுக்கல்லூரி முதல்வர்களாக பேராசிரியர்களாக இமாம்களாக சேவர்களாக புகழ் மணம் பரப்பிற்க் கொண்டிருப்போர் ஏராளமானோர் ஊண்டு .அந்தப் பட்டியல் மிகப்பெரியது.

தென்னிந்தியாவின் மூலைமுடுக்கெங்கும் உருவான அரபி மதரஸாக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாக்கியாத்தை முன்னுதாரணமாக கொண்டே உருவாக்கப்பட்டன, அதனால் தென்னிந்தியாவின் ஆலிம்கள் அனைவரும் பாக்கியத்தோடு நேரடியாகவோ அல்லது அவர்களது ஆசிரியர்கள் மூலமாகவோ பாக்கியாத்தோடு தொடர்புடையவர்களாகவே இருப்பர்.


பாக்கியாத்தின் இரனடாவது மகத்தான தீன் பணி  தலை சிறந்த சொற்பொழிவாளர்களை தென்னிந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு தந்ததாகும் .அந்தப் பேச்சாளர்கள் முஸ்லிம்கள் வாழும் நாடு நகரெங்கும் சென்று சன்மார்க்க சங்க நாதம் செய்தனர். தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களாக அன்றும் இன்றும் பாகவிகள் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு மாநாடும் பாகவிகள் இல்லாமல் நிறவடைவதில்லை. இது அஃலா ஹ்ஜரத் அவர்களின் பரகத்தின் பயனாகும். அஃலா ஹஜ்ரத் அவர்களால் உருவாக்கப் பட்ட ஒரு சமுதாயம் இன்றும் மக்களை நேரடியாக சந்தித்து மார்கத்தை சிறப்பாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது,

அன்றயை காலத்தில் சுல்தானுல் வாஇலீழ்ன் கமாலுத்தீன் பாகவி ஹழரத், ஷேக் ஆதம் ஹழரத் மணி மொழி மௌலானா கலீலுர்ரஹ்மான் பாகவி ஹஜ்ரத்  இடைய கோட்டை இஸ்ஹாக் ஆலிம் திருப்பூர் கமாலுத்தீன் பாகவி ஆரணி  கமாலுத்தீன் பாகவி , பெரிய குளம் ஷர்புத்தீன் பாகவி ஹழரத், காயல் பட்டினம் ஹைதுரூஸ் பாகவி ஹஜ்ரத்  நீடூர் சம்சுல் ஹுதா ஹஜ்ரத், கடையநல்லூர் யூசுப் அன்சாரி ஹழரத் பெங்களூரு அபுஸ்ஸுவூத் ஹழரத் –ஷப்பீர் அலி ஹஜ்ரத்  பி எஸ், பி ஜைனுல் ஆபிதீன் ஹழரத் கோவை சி. வி அபூபக்கர் பாகவி ஹழரத் ஓ எம்  அப்துல் காதிர் ஹழரத்  முஹம்மது கான் ஹழரத்  கம்பம் பீர்முஹம்மது பாகவி முஹம்மது ரிழா பாகவி ஹஜ்ரத் எஸ் எஸ் அஹ்மது ஹழரத் மேலப்பாளையம் காஜாமுஈனுத்தீன் அப்துல் அஜீஸ் பாகவி ஹழரத் தஞ்சை ரபிஉத்தீன் பாகவி ஹழரத ஏரல் பீர் முஹம்மது பாகவி பௌஜ் அப்துர்ரஹீம் ஹழரத் வடகரை சாஹுல் ஹமீது ஹழரத் சென்னை சதீதுத்தீன் பாகவி ஹழரத் சேலம் அபுதாஹிர் பாகவி ஹழரத் திண்டுக்கல் லத்தீப் பாகவு துத்துக்குடி இம்தாதுல்லாஹ் பாகவி நீடுர் அப்துர்ரஹ்மான் பாகவி ஹழரத்  சென்னை பக்ருத்தீன் பாகவி ஹழரத் ஆகியோரும் இன்னும் பன்னூற்றுக் கணக்கானோரும் பாக்கியாத்தின் சொற்பொழிவுப் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறார்கள்.

பாக்கவிகளின் சொற்பொழிவு என்பது பன் முகம் கொண்டதாகும். மார்க்க சொற்பொழிவுகளில் மட்டும் அல்ல பொது அரங்குகளிலும் இஸ்லாமை நிலைநிறுத்தியதில் அவர்களுக்கு தனிப் பங்கு உண்டு,

சேக் ஆதம் ஹஜரத் அவர்கள் வேலூரில் நடைபெற்ற ஒரு கிருத்துவ கூட்டத்தை கடந்து செல்கிற போது பாதிரியார் பேசிக் கொண்டிருந்தது ஹஜ்ரத்தின் காதுகளில் விழுந்தது.
முஹம்மது நபி தன்னுடைய் மகள் பாத்திமாவைப் பார்த்து உன்னை என்னால் காப்பாற்ற முடியாது என்று சொன்னார்.
யேசுவோ பாவிகளைப் பார்த்து என்னிடம் வாருங்கள் நான் மன்னிப்புத் தருகிறேன் என்றார். அது தான் ஏசுவின் சிறப்பு என்று பாதிரி பேசினார்.
ஹஜ்ரத் அவர்கள் நேரே கூட்டத்திற்கு உள்ளே சென்று நான் ஒரு கருத்துச் சொல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார், ஹஜ்ரத்தின் தோற்றத்தை பார்த்து மரியாதையோடு அனுமதித்தார்கள். ஹஜ்ரத் மேடையேறி சொன்னார். ஒரு டாக்டர் தன் மகளைப் பார்த்து மகளே நான் மருத்துவர் என்பதால் நீ எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்ளலாம் நோயை கண்டு பயப்படாமல் இருந்து விடாதே என்கிறார்.  இன்னொரு மருத்துவர் தன் மகளைப் பார்த்து மகளே உன் தந்தை நான் மருத்துவன் நீ என்னவும் செய்து கொள் உன்னை நான் காப்பாற்றுகிறேன். என்கிறார் இந்த இரண்டு மருத்துவர்களில் யார் சிறந்த மருத்துவர் என்று கேட்டார்.
. முஹம்மது நபி முதல் மருத்துவரைப் போலத்தான் தன் மகளிடம் கூறினார் என்று ஹ்ஜரத் கூறியதும் கிருத்துவர்கள் வாயடைத்துப் போயினர்.
 (எச்; கமாலுத்தீன் ஹஜ்ரத் சொன்ன செய்தி இது)

தமிழகத்தின் செம்மாந்த சொற்பொழிவுக்கு பெயர் பெற்ற ஷப்பீர் அலி ஹஜ்ரத் (தாமத் பரகாத்துஹு) அவகளின் சொற்பொழிவுகளுக்கு ஒரு தனி வரலாறே இருக்கிறது. தமிழகத்தில் பாக்கியாத்த்திற்கு அதிக மாணவர்களை கொண்டு வந்து சேர்த்த்தில் ஹஜ்ரத் அவகளின் சொற்பொழிவுகளுக்கு ஒரு பங்கு உண்டு. அதில் நானும் ஒருவன் .(அப்துல் அஜீஸ் கோவை) அண்ணாதுரையுடன் உரையாற்றிய ஹழரத் அவர்கள் கம்யூனிச மேடைகளிலும் சங்க நாதம் செய்தவர் ஆவார். அவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் மாநாடாக மிளிரும்.

1977 வேலூர் கோட்டை மைதானத்தில் திக் இயக்கத்தினரோடு ஒரு கூட்டத்தில் ஷப்பீர் அலி ஹஜ்ரத் பேசினார், பெரியார் தாசன் கடவுளை மறுத்துப் பேசினார். கடவுள் கண்ணுக்குத் தெரிகிறாரா? கண்ணுக்குத் தெரியாத்தை எப்படி நம்புவது. எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் அவர்.
அதை தொடர்ந்து ஷப்பீர் அலி ஹழரத் கர்ஜனை செய்தார். கண்ணால் பார்ப்பதை எல்லாம் நம்புவாயா? அது வும் இந்தக் காலத்தில் இரயிலில் போகிற போது எதிரே மரங்கள் மரங்கள் ஓடுவதாக தெரிகிறது சும்மா நிற்கிற இரயில் வண்டி ஓடுவதாக தெரிகிறது அதை அப்ப்டியே நீ நம்பி விடுவாயா? எதையும் தீர விசாரித்தால் தான் உண்மை என்கிறாயே தன்னுடைய பிறப்பையும் அப்படி தீர விசாரித்துத்தான் ஏற்பாயா? அம்மாவை நம்பாவிட்டால் வரலாறு நாற்றமடித்து விடாதா? என்று அவர் கேட்ட அந்தக் கேள்வியில் திக வினர் பதில் பேசாது அமர்ந்து திருந்தனர்,
   
மற்றொரு முறை தேசிய ஒருமைப்பாட்டு விழா அப்போதைய சபாநாயகர் ராஜாராம் தலைமையில் நடந்தது. கல்வியமைச்சர் அரங்க நாயகம் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே ஆகியோர் கூட்டத்தில் இருந்தனர். ஆரணி தொகுதி எம் எல் ஏ சின்னக் குழந்தை இந்து கிருத்து முஸ்லிம் என்ற மத அடையாளங்களை விட்டெழிக்க வேண்டும் என்று பேசினார். பின்னர் பேசிய ஷப்பீர் அலி ஹஜ்ரத் அவர்கள் பெயரில் தான் சின்னக் குழந்தை அறிவிலுமா சின்னக் குழந்தையாக இருப்பது. இந்த நாட்டில் இந்துக்கள் இந்த்துக்களாகவும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும் இருப்பதில் தானே தேசிய ஒருமைப்பாடு இருக்கிறது. சிங்கப்பூரில் தொலைபேசியில் நான் பேசிக் கொண்டிருந்தேன், அதை கேட்ட பட்டை அணிந்த ஒரு சாமியார் ஐயா இவ்வளவு அழகு தமிழில் பேசுகிறீரே என்று சொல்லி என் தலைப்பாகை அணிந்திருந்த என் நெற்றியில் முத்தமிட்டார் இது வல்லவா தேசிய ஒருமைப்பாடு என்று ஹஜ்ரத் பேசிய போது மேடையிலிருந்தோர் பலத்த கரகோஷம் செய்து அதை வரவேற்றனர்.

தென்காசி அபுல் ஹஸன் ஷாதுலி பாகவி ஹழரத் அவர்கள் கிருத்துவர்களிடம் வாதம் செய்வதில் கை தேர்ந்தவராக இருந்தார்.
“சிலுவையை கழுத்தில் போட்டுள்ளீர்களே! –ஈஸாவை கொல்ல கொலையாளிகள் பயன்படுத்திய  பொருளை நீங்கள் ஏன் மதிக்கிறீர்கள் என்று அவர் கிருத்துவ கூட்டத்தில் கேட்டதும்
அனை இருந்தால் மதகுகள் இருந்தாக வேண்டும் இல்லை என்றால் அனை உடையத்தான் செய்யும். பாதிரிகள் பலபேர் கட்டுப்பாடுகளை உடைத்ததற்கு காரணம் இது தான் அந்தப் பிஷப்புகளின் பெயர்களை நான் சொல்லவா என்று கிருத்துவ குருமார்களின் கூட்டத்தில் ஹழரத் அவர்கள் கேட்ட கேள்வி மிகப் பிரபலமானதாகும்.

இதே போல இஸ்லாத்திற்கு எதிரானவர்களின் குழப்பங்களை முறியடிப்பதில் காலத்தின் தேவைக்கேற்ப பாகவிகள் தம்முடைய சொற்பொழிவுகளால் சமுதாயத்திற்கு நற்சேவை புரிந்தனர்,
காதியாணிகளை முறியடிப்பதில் ஈடுபட்ட 70 ஆலிம்களில் 60 பேர் பாகவிகளாக இருந்தனர்,

பாக்கவிகளால் சமுதாயம் பெற்ற மூன்றாவது முக்கியச் சேவை எழுத்துச் சேவையாகும்
அற்புதமான பல எழுத்தாளர்களின் தமிழுலகத்திற்கு பாக்கியாத் வழங்கியது, காலம் கடந்து நிற்கிற சேவையாளர்கள் அவர்கள். இவர்களுடைய சேவை இன்று வரை தனிப் பெருமைக்குரியதாக இருந்து வருகிறது,

தர்ஜமதுல் குர்ஆன் பீ அல்தபில் பயான் என்ற பெயரில் தமிழில் திருக்குர் ஆணை முதன் முதலாக மொழி பெயர்ப்பை பதிப்பித்தவர்  ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி  
தப்ஸீருல் ஹமீது என்ற பெயரில் திருக்குர்ஆன் விரிவுரையை தந்தவர்  எஸ்.எஸ் அப்துல் காதிர் பாகவி
அன்வாறுல் குர்ஆன் என்ற புகழ் பெற்ற திருக்குர் ஆன் விரிவுரையை தமிழில் தந்தவர்கள்.
ஹாபிழ் ; ஈ.எம் அப்துர ரஹ்மான் நூரிய்யி பாஜில் பாகவி ஆவார்.

உத்தமபாளையம் பி.எஸ்.கே முஹம்மது இபுறாகீம் பாகவி ஏராளமான ஹதீஸ் நூல்களையும் மற்ற நூல்களையும் தமிழுக்கு தந்தவர் ஆவார். அதே போல நாகூர் எஸ்.அபதுல் வஹாப் பாகவி
கம்பம் ஏ. சதகதுல்லாஹ் பாகவி ஸதகத்துல்லாஹ் சிராஜ் பாகவி (கீரனூர்)
நூருல் இஸ்லாம் பதிரிகையின் ஆசிரியர் சென்னை முஹம்மது யூசுப் பாகவி
புரவலர் போர்த்திய பொன்னாடை எழுதிய என் எஸ் அப்துல் காதிர் பாகவி ஹழரத் அப்துல் பத்தாஹ் பாகவி ஆகியோர் தலை சிறந்த எழுத்தாளர்கள் ஆவர். இப்போதும் ஓ.எம் அபதுல் காதிர் பாகவி முஹ்ம்மது கான் பாகவி,  அப்துல் அஜீஸ் பாகவி சேலம் நைனார் பாகவி எப் ஜமால் பாகவி நீடூர் அப்துர்ரஹ்மான பாகவி நூ அப்துல் ஹாதி  பாகவி  உள்ளிட்ட  பலர் சிறந்த எழுத்தாளர்களாக மார்க்கத்தின் தேவையை நிறைவேற்றி வருகிறார்கள்.

பத்ரிகை துறையில் குர்ஆனின் குரல் ஆசிரியர் அப்துல் ஜப்பார் பாகவி சிந்தனை பீர் முஹம்மது பாகவி சமநிலைச் சமுதாயம் ஜாபர் சாதிக் பாகவி ரஹ்மத் அப்துர்ரஹிம் பாகவி ஜமாத்துல் உலமா இப்புறாகீம் பாகவி ஆகியோர் தலை சிறந்தவர்களாவர்,


தென்னிந்திய மக்களுக்கு பாக்கியாத் செய்த நான்காவது சிறந்த பணி பத்வா வழங்குவதாகும்.

தென்னிந்திய மக்கள் பாக்கியாத்தின் பத்வாக்களுக்கு அதிக மதிப்பு கொடுத்தனர், பிரச்சினைக்குரிய விசயங்களில் பாக்கியாத்தின் பத்வாவையே இறுதித்தீர்ப்பாக எடுத்துக் கொண்டனர், தென்னிந்திய மக்களின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக எது இருக்கிறதோ அது பாக்கியாத் பத்வாவின் விளைவேயாகும்.

பாக்கியாத்தின் பத்வா துறையில் அதன் முன்னோடிகளில் ஒருவரான ஷைகு ஆதம் ஹஜ்ரத அவகள் 60 ஆண்டு காலம் பாக்கியாத்தில் பணியாற்றியவராவார். அஃலா ஹஜ்ரத அவர்களால் பத்வா துறைக்கு நியமிக்கப் பட்ட அவர்கள் முப்தியில் அஃல்ழம் மாபெரும் முப்தி என்று வட இந்திய பத்ரிகைகளில் புகழப்படும் அளவு சிறந்த சட்ட வல்லுநராக இருந்தார்கள். அதே நேரம் யாருக்காவும் சட்டத்தில் சமரசம் செய்து கொள்ளாதவராக இருந்தார். ஒரு முறை மதரஸாவின் நிர்வாகி ஒருவர் தனக்குச் சார்பாக தீர்ப்பு வேண்டும் என்ற நினைப்பில் ஹஜ்ரத்தை அணுகிய போது நீங்கள் எழுந்து போகலாம் என்று அவரிடமும் இவரை அனுப்பி விட்டு வாருங்கள் என பணியாளரிடமும் கூறினார்கள். ஹழரத் அவர்கள் காலண்டரில் காலணா அரையணா என்று எழுதி வைப்பார்கள் அது என்ன வென்பது புரியாமல் இருந்தது, ஒரு மாணவர் துணிந்து கேட்டார், ஹழரத் கூறினார் சில நேரங்களில் ஒளு செய்யவும் மற்ற தேவைகளுக்கும் மதரஸாவின் தன்னீரைப் பயன்படுத்துகிறேன் அதற்கான காசை  குறித்து வைக்கிறேன். மாத்தின் இறுதியில் இந்தப் பணத்தை உண்டியலில் போட்டு விடுவேன் என்றார்கள்.

பாக்கியாத்தின் 150 ஆண்டு கால வரலாறு ஏராளமான சிறந்த மனிதர்களை உருவாக்கி இந்த் தீனுக்கு வழங்கியிருக்கிறது ,அங்கு பயின்ற பெரும்பாலானோர் சிறப்பாக மார்க்கப்பணியில் பெயர் பெற்றார்கள்

இதற்கொரு காரணத்தை மறைந்த ஆண்மீகத் தந்தை ஆரணீ கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் சொல்வார்கள் . பாக்கியாத்தின் நிறுவனர் அண்ணல் அஃலா ஹஜ்ரத் அவர்கள் பாக்கியாத்தை துவங்கிய  நேரத்தில் ஹஜ்ஜுக்கு சென்றபோது “யாரெல்லாம் இந்த மதரஸாவில் கல்வியை தேடி நுழைந்தார்களோ அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மேன்மையைக் கொடு – என்று  பிரார்த்தித்தார்கள், அல்லாஹ் அந்த்தப் பிரார்த்தனைய ஏற்றுக் கொண்டான், அதனால் நீங்கள் பாக்கியாத்திற்கு செல்லுங்கள் என ஆரணி ஹஜ்ரத் அவர்கள் கூறுவார்கள் .அவ்வாறு ஆரணி ஹஜ்ரத் அவர்கள் கூறியதைக் கேட்டு பாக்கியாத்திற்கு வந்தவன் தான் நான் மேலப்பாளையம் பி ஏ காஜாமுயீனுத்தீன் பாகவி கூறினார்.

(பாக்கியாத்தின் 150 ஆண்டு விழாவில் இரண்டாம் நாள் நடைபெறுகிற தமிழ் நிகழ்ச்சியில் மொலனா காஜா ஹஜ்ரத் பேச தயாரித்திருந்த குறிப்புகள் பலவும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

 நன்றி ;-- கோவை அப்துல் அஜீஸ் பாக்கவி ஹஜ்ரத்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

No comments:

Post a Comment